Aran Sei

எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை நீட்டித்த ஒன்றிய அரசு – மாநில உரிமைகளில் தலையிடுவதாக பஞ்சாப், மே.வங்க அரசுகள் குற்றச்சாட்டு

ஞ்பாப், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் சர்வதேச எல்லைக்கு உட்பட்ட எல்லை பாதுகாப்பு படையின் (பிஎஸ்எஃப்) அதிகார வரம்பை 15 கிலோமீட்டரில் இருந்து 50 கிலோமீட்டருக்கு நீட்டிக்க உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதற்கு, மாநில உரிமைகளில் தலையிடும் செயல் என பஞ்சாப், மேற்கு வங்க மாநில அரசுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

எல்லைப் பாதுகாப்பு படையின் ’செயல்திறனை மேம்படுத்தவும்’ மற்றும் ‘கடத்தல்களை தடுக்கவும்’ இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்க்விட் கேம்: முதலாளித்துவ எதிர்ப்பின் எழுச்சி

”இந்த முடிவு பாரபட்சமானது, கூட்டாட்சி தத்துவத்தின் மீதான நேரடித் தாக்குதல், மத்திய முகமைகள் மூலம் ஊருடுவும் முயற்சி” என பஞ்சாப், மேற்கு வங்க அரசுகள் குற்றம்சாட்டியுள்ளன.

சர்வதேச எல்லைகள் கொண்ட மாநிலங்களில் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்காக, எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்புகுறித்து ஒன்றிய அரசின் 2014 ஆண்டு அறிக்கையில் தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மணிப்பூர், மிசோரம், திரிபுரா, நாகாலாந்து, மேகலாயா ஆகிய மாநிலங்கள் மற்றும் ஜம்மு – காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களில் மொத்த பகுதியிலும் மற்றும் குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் 50 கிலோமீட்டர் வரையிலும் பி.எஸ்.எஃப் அதிகாரத்தைப் பயன்படுத்த இந்தத் திருத்தம் வழிவகை செய்கிறது.

நல்ல இஸ்லாமியர், கெட்ட இஸ்லாமியர் – அக்பரை முன்வைத்து வலதுசாரிகள் கட்டமைக்கும் கருத்தியல்

முன்னதாக 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில், குஜராத்தில் 80 கிலோமீட்டரும், ராஜஸ்தானில் 50 கிலோமீட்டரும் மற்றும் பஞ்சாப், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் 15 கிலோமீட்டர் வரையிலும் அதிகாரத்தைப் பயன்படுத்த பி.எஸ்.எஃப்பிற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

”சர்வதேச எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 50 கிலோமீட்டர் வரை பி.எஸ்.எஃப்பின் அதிகாரவரம்பை அதிகரிக்கும் ஒன்றிய அரசின் முடிவுற்கு கடும் கண்டங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது கூட்டாட்சி தத்துவத்தின் மீதான நேரடித் தாக்குதல். இந்தப் பாரப்பட்சமான முடிவை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக திரும்ப பெற வேண்டும்” என பஞ்சாப் மாநில முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் என்கவுண்டர்கள் ஆபத்தானது; நீதித்துறைக்கு எதிரானது – தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு

மேற்கு வங்க அரசின் போக்குவரத்து துறை அமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஃபிர்ஹாத் ஹக்கீம், “ஒன்றிய அரசு நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை மீறுகிறது. சட்டம் ஒழுங்கு என்பது மாநில பிரச்னை. ஆனால், ஒன்றிய அரசு மத்திய முகமைகள் மூலம் தலையிட முயற்சிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

Source : The Indian Express

 

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்