Aran Sei

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மக்களுக்கு உதவத்தயார் – பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

கொரோனா இரண்டாம் அலையில் மிகக்கடுமையான பாதிப்பைச் சந்தித்து வரும் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாகப் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

” விவசாய போராட்ட பிரச்சினையை இந்தியத் தரப்பிடம் எழுப்புக ” – போரிஸ் ஜான்சனிடம் வலியுறுத்தும் பிரிட்டிஷ் எம்பிக்கள்

இதுகுறித்து தெரிவித்துள்ள போரிஸ் ஜான்சன், ‘‘கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மக்களுக்கு எந்த வகையில் உதவ முடியும் என்பது குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த உதவி வென்டிலேட்டர்கள் அல்லது மருத்துவ வசதிகளாக இருக்கும் என்று எண்ணப்படுகிறது.

“பேச்சுவார்த்தையை அமித்ஷா திசை திருப்பினார்” – போராடும் விவசாயிகள் குற்றச்சாட்டு

இந்தியாவில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததாலும், கொரோனா தொற்று அதிவேகமாகப் பரவிவரும் சூழலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SOURCE; REUTERS

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்