உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா நாட்டின் மீது, பொருளாதார தடைகளை விதிக்க முடிவு செய்துள்ளதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய, ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு நேட்டோ அமைப்பில் உள்ள அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காரணம், உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் பாதுகாப்பு அச்சுறுத்தல், உக்ரைனில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகரிப்பது என்று பல ரூபங்களில் ஆபத்து வந்துவிடும் என்று ரஷ்யா கருதுகிறது.
இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வந்தது. இந்நிலையில், உக்ரைன் மீது, ரஷ்யா வான்வெளி மற்றும் தரை வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் ரஷ்யா மீது பொருளாதாரத்தடை பிரிட்டன் விதித்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், ‘எங்களின் நட்பு நாடுகளும், ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்க முன்வந்துள்ளன. உக்ரைன் மீது மிகப்பெரிய வன்முறையை புடின் நிகழ்த்தியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படுவதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ அறிவித்திருந்தார். அமெரிக்காவும், ரஷ்யாவின் 2 நிதி நிறுவனங்களான விஇபி, ரஷ்யாவின் ராணுவ வங்கி ஆகியவை மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. இந்நிலையில், பிரிட்டனும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க முன்வந்துள்ளது. இதற்கிடையில் உக்ரைனுக்கு உறுதியாக இருப்போம் என்று ஜி7 நாடுகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.