பிரேசில் நாட்டின் அதிபர் போல்சனரோ, கொரோனா தொற்றை கையாண்ட விதத்திற்கு எதிராக 16 க்கும் மேற்பட்ட நகரங்களில் அந்நாட்டு மக்கள் “போல்சனரோவே வெளியேறு” என்ற முழக்கத்தை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், போல்சனரோவிற்கு எதிரான பதாகைகளை ஏந்தியும், கொரோனா தொற்று நடைமுறைகளைச் சரிவர விதிக்கத் தவறிய தீவிர வலது சாரி தலைவர் போல்சனரோ அதன் தீவிரத்தை குறைத்து, முகமூடி அணிவதை நிராகரித்தாலும், தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தை சந்தேகித்ததாலும் 4,60,000 பேருக்கும் மேல் இறந்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
இடது சாரி அமைப்புகளும், மாணவர்களும் நேற்றைய தினம் நடத்திய போராட்டம் அந்நாட்டின் தலைநகர் பிரேசிலிய மற்றும் ரியோ டி ஜெனிரோவில் அமைதியான முறையில் நடந்துள்ளதாகவும், ஆனால் வடகிழக்கு நகரமான ரெசைப்பில் காவல் துறை கண்ணீர் புகைக்குண்டுகளை வீசிப் போராட்டத்தைக் கலைக்க முயன்றதாகவும் தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பிரேசிலின்மிகப்பெரிய நகரமான சாவ் பாலோ நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் முகக்கவசம் அணிந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், போல்சனரோவை ரத்தக்காட்டேரி போன்று சித்தரிக்கும் ராட்சச பலூன் ஒன்றும் பறக்கவிடப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.