Aran Sei

பிரேசில் அதிபர் மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் – அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம்

பிரேசில் நாட்டு அதிபர் ஜைர் போல்சனரோ மீதான ஊழல் குற்றச்சாட்டை, அந்நாட்டு உச்சநீதிமன்ற விசாரிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், எண்ணற்ற பிரேசிலிய மக்கள் அவருக்கு எதிராக, அந்நாட்டு வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 2 அன்று , அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி ரோசா வெப்னர், பாரத் பையோடெக் நிறுவனத்திடம் இருந்து 20 மில்லியன் தடுப்பு மருந்துகள் வாங்க 300 மில்லியன் அமெரிக்க டாலர் ரூபாய் மதிப்பில் கையெழுத்தான ஒப்பந்தத்தில் எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, அந்நாட்டு அதிபர்
மீத விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார்.

‘கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய பிரேசில் அதிபர்’ – பதவிவிலகக் கோரி மக்கள் போராட்டம்

இந்நிலையில், அந்நாட்டு அதிபர் ஜைர் போல்சனரோவுக்கு எதிராக, அந்நாட்டு மக்கள் அந்நாட்டின் 350 மேற்பட்ட நகரங்களில்,  அவரது ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

” ஜனநாயகத்தை தினம் தினம் தாக்குபவர்களை சகித்துக் கொள்ளக் கூடாது ” – பிரேசில் அதிபரை பதவி நீக்கம் செய்ய அழைப்பு

அதிபர் ஜைர் போல்ஸானரோ அந்த ஒப்பந்தத்தில் இருந்த முறைகேடுகள் குறித்து அறிந்திருந்த நிலையிலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்காததால் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது,மேலும், பிரேசில் சட்டபடி தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இவ்வாறு செயல்படுவது குற்றமாகும் .

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்