Aran Sei

வலதுசாரி கருத்தியலுக்கு வலுத்த எதிர்ப்பு – மையவாத கட்சிக்கு மாறிய பிரேசில் அதிபர் போல்சனாரோ

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மையவாத கருத்தை கொண்ட லிபரல் கட்சியில் இணையவுள்ளாதாக அந்த கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தீவிர வலதுசாரி கருத்தை கொண்ட போல்சனாரோ அதற்காகவே உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கடும் விமரசனங்களை சந்தித்து வந்தார்.

உலகத்தின் நுரையீல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் பற்றி எரிந்தபோது, உலகமே அதைப் பற்றி கவலை கொண்டது. ஆனால், போல்சனாரோ அதற்கு எதிராகவே கருத்தை தெரிவித்தார். பண்ணைகள் அமைப்பதற்கு அமேசான் காடுகள் அழிக்கப்படுவதை போல்சனாரோ ஆதரித்தார். அமேசான் காடுகளை பாதுகாக்க வேண்டும் என்று குரல் எழுப்புவது பிரேசில் பொருளாதார வளர்ச்சிக்கு எதிராக வளர்ந்த நாடுகள் செய்யும் சதி என்று வெளிப்படையாக கூறினார்.

கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கிய சமயம், அப்போதை அமெரிக்க அதிபரும் தீவிர வலதுசாரியுமான டொனால்ட் ட்ரம்ப், “இது ஒரு சாதாரண காய்ச்சல்” என்று கூறியதுடன், முகக் கவசம் அணிவதற்கு எதிராகவும் கருத்து தெரிவித்துவந்தார்.

இதற்கு ஒருபடி மேலே சென்று முகக்கவசம் அணியாமல் தனது ஆதரவாளர்கள் மத்தியில் தோன்றிய முகக்கவசதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தார் அதி தீவிர வலதுசாரியான போல்சனாரோ.

இவ்வாறு, கொரோனா பெருந்தொற்றை எதிர்கொண்ட விதத்திற்காக பிரேசில் மக்களால் போல்சனாரோ கடுமையாக விமர்சிக்கப்பட்டார். கொரோனாவல் அந்நாட்டில் சுமார் 6 லட்சம்பேர் உயிரிழந்த நிலையில், கொரோனாவை போல்சனாரோ கையாண்ட விதம் குறித்து அந்நாட்டு நாடாளுமன்ற குழு (செனட் கமிட்டி) விசாரணை நடைபெற்று வருகிறது.

இதைப்போல், போல்சனாரோவுக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன.

சோசியல் லிபரல் கட்சியின் சார்பாக போட்டியிட்ட 2019ஆம் ஆண்டு பிரேசில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட போல்சனாரோ, ஒரே ஆண்டில் அந்த கட்சியிலிருந்து வெளியேறினார். அதன் பிறகு தனியாக கட்சி தொடங்க முடிவெடுத்த போல்சனாரோ அதற்கு போதிய ஆதரவு கிடைக்காததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த கட்சியையும் சாரமலேயே உள்ளார்.

அடுத்த ஆண்டு பிரேசில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தீவிர வலதுசாரியான போல்சனாரோ, மையவாத கருத்தைக் கொண்ட லிபரல் கட்சியில் இணைய முடிவெடுத்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள போல்சனாரோ “மையவாத கட்சியில்லை என்றால், இடதுசாரிகள்தான் உள்ளனர். நான் வேறு எங்கு செல்ல முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Source: AP

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்