Aran Sei

கறுப்பின கால்பந்து வீரர்களுக்கு எதிரான நிறவெறியூட்டும் பதிவுகள் : வெட்கக்கேடான செயல் என இங்கிலாந்து பிரதமர் கண்டனம்

யூரோ கால்பந்து போட்டியின் போது,  கறுப்பினத்தைச் சார்ந்த இங்கிலாந்து அணியின் கால்பந்து  வீரர்கள், பெனால்டி வாய்பை பயன்படுத்தி  கோல் அடிக்காதது  குறித்து நிறவெறியோடு  இணையத்தில் கருத்து பதிவிடுபவர்கள் தங்களைப் பற்றி தாங்களே வெட்கப்பட்டுக்கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

யூரோ கோப்பைக் கால்பந்து இறுதிப் போட்டியில் இத்தாலிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் வீரர்களான மார்கஸ் ராஷ்போர்ட், ஜடன் சான்சோ மற்றும் புகயோ சாகோ ஆகியோர் பெனால்டி வாய்பை பயன்படுத்தி  கோல் அடிக்க தவறினர். இதன் காரணமாக, இத்தாலி அணிக்  கோப்பையைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, பலர் நிறப்பாகுபாட்டோடு  அந்த வீரர்களை  இழிவுப்படுத்தும் வகையில் பதிவிட்டுள்ளனர்.

கோல் வாய்ப்பைத் தவறவிட்ட வீரர்களுக்கு எதிராக நிறவெறியூட்டும் பதிவுகள் – கடும் நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து கால்பந்து சம்மேளனம் முடிவு

இதுதொடர்பாக, இன்று (ஜூலை 12), தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள போரிஸ் ஜான்சன், “இந்த இங்கிலாந்து கால்பந்து அணி வீரர்கள் ஹீரோக்கள் என பாராட்டப்படுவதற்கு தகுதியானவர்களே அன்றி, சமூக வலைதளங்களில் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு அல்ல. இந்த அச்சுறுத்தலான துஷ்பிரயோகத்திற்கு காரணமானவர்கள், தங்களைப் பற்றி தாங்களே வெட்கப்பட்டுக்கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, இன்று (ஜூலை 12), இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் டாம் துஜெந்தாட், சமூக வலைதளங்களில் உங்களுக்கு விளம்பரங்களை குறிவைத்து அளிக்கும் வழிமுறைகள் உள்ளன என்றும் ஆனால் சில முன்மாதிரியான இளைஞர்களுக்கு எதிரான இனவெறி துஷ்பிரயோகங்களை அது தடுக்காது என்றும் டிவீட் செய்துள்ளார்.

மேலும், “அக்கருத்துகளை எழுதியவர் பரிதாபகரமானவர்கள். இதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியவர்கள். இவர்கள் வெறுப்பை கக்குவதன் வழியாக லாபமடைய நினைப்பவர்கள்.” என்று அவர் விமர்சித்துள்ளார்.

கறுப்பினத்தவரைக் கொன்ற காவல்துறை அதிகாரிக்கு 22.5 ஆண்டுகள் சிறை – அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள லண்டன் பெருநகர காவல்துறை, கால்பந்து  வீரர்கள் மீது தாக்குதல் மற்றும் இனவெறி ரீதியாக இணையத்தில் பதிவிட்டவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது  என்று கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்