Aran Sei

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை – உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைக்கும் பிரிட்டன்

ஐக்கிய முடியரசு பிரதமர் போரிஸ் ஜான்சன் - Image Credit : ndtv.com

ந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில் தொற்று அதிகரித்து வரும் சூழலில் உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களும் ஆக்சிஜன் வென்டிலேட்டர்களும் செறிவூட்டிகளும் அனுப்பி வைக்க இருப்பதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.

‘விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் அனைத்து தரப்புகளுக்கும் தடை’ – அதிகாரபூர்வமாக அறிவித்தது இலங்கை அரசு

நாளை, முதற் கட்டமாக, மொத்தம் 9 கன்டெய்னர்களில் 495 ஆக்சிஜன் செறிவூட்டிகளும், 120 நான்-இன்வேஸிவ் வென்டிலேட்டர்களும்,  20 மேனுவல் வென்டிலேட்டர்களும் டெல்லியை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், “இந்தியாவில் கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் இருந்து மீள்வதற்காக உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளதாக என்.டி.டி.வி செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அக்கிரமங்களை எதிர்த்த அசாஞ்சேவுக்கு வெற்றி – நாடு கடத்த முடியாது என பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பு

மேலும், “இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பிரிட்டன் உற்ற நண்பனாக உடன் நிற்கும், உலக அளவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பிரிட்டன் எல்லா விதமான உதவிகளையும் செய்யும்” என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இதே போன்று ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவிற்கு உதவ முன் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்