Aran Sei

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று : எல்லைகளை மூடிய நியூசிலாந்து

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து வரும் பயணிகளுக்கு ( தங்கள் சொந்த நாட்டு குடிமக்கள் உட்பட) நியூசிலாந்து அரசு தடை விதித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

நியூசிலாந்து அரசு தன்னுடைய நாட்டின் எல்லைக்குள் கொரோனா தொற்றை ஏறக்குறைய ஒழித்துள்ளது. ஆனால், சமீபமாக நியூசிலாந்து எல்லைக்குள் வரும் பலர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால், அது எல்லைகளின் அமைப்புகளை மாற்றியமைத்துள்ளது. இதில் பெரும்பாலானோர் இந்தியாவில் இருந்து திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பெருந்தொற்று – ஜிடிபி-யில் 90% ஆக உயர்ந்த இந்தியாவின் கடன் சுமை

நியூசிலாந்து நாட்டில், நேற்றைய தினம் 7 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர், கடந்த 8 மாதங்களில் ஒரே நாளில் ஏழு பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைவது இதுவே முதல்முறை எனவும் இன்றைய தினம், நியூசிலாந்து நாட்டில் 23 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 17 பேர் இந்தியாவில் இருந்து நியூசிலாந்து திரும்பியவர்கள் எனவும் தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா விதிகளை மீறினால் 5000 அபராதம் விதிக்க வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த, நியூசிலாந்து பிரதமர், ஜேகிண்டா ஆர்டர்ன், ” இந்தியாவில் இருந்து நியூசிலாந்து வரும் பயணிகளின் வருகையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்” என்று அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் மக்களை திருப்பியனுப்பும் சூழல் – மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

”இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதே, இந்தியாவில் இருந்து நியூசிலாந்து வரும் பயணிகளை தற்காலிமாக நிறுத்துவதற்கான காரணம், கொரோனோ நோய்த்தொற்று பரவல் எங்கு பரவ தொடங்குகிறதோ அங்கிருந்தே அதை கட்டுப்படுத்த விரும்புகிறோம். இந்த கட்டுப்பாடுகள் ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு மட்டும் கிடையாது” என்றும் அவர் கூறியுள்ளதாக தி இந்துவின் செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்