Aran Sei

மகாரஷ்டிரா மாநில அதிகாரிகள் இஸ்ரேலுக்கு பயணம் செய்த விவகாரம் – மகாராஷ்டிரா அரசு பதிலளிக்க பம்பாய் உயர்நீதிமன்றம் உத்தரவு

காராஷ்டிரா மாநிலத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனரத்தின் அதிகாரிகள் 2019 ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டது, பெகசிஸ் மென்பொருள் வாங்கத் தானா என்று மகாராஷ்டிரா அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என அம்மாநில உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

லக்‌ஷ்மண் புரா மற்றும் டிமாபர் தாக்கல் செய்த பொதுநல மனுக்களை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டின் பெகசின் உளவு மென்பொருள் கொண்டு, உலக நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள் ஆகியோர் வேவு பார்க்கப்பட்டது ஆதாரப்பூரமாக நிரூபிக்கப்பட்டது.

அம்நெஸ்டி இண்டர்நேஷனல் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஊடக நிறுவனமான ஃபர்பிடன் ஸ்டோரீஸ் இணைந்து நடத்திய ஆய்வு முடிவுகள், இந்தியாவின் தி வயர் இணையதளம் உள்ளிட்ட 17 ஊடகங்களுடன் பகிரப்பட்டது.

மகாராஷ்டிரா அதிகாரிகளின் வெளிநாட்டு பயணத்திற்கு தொடர்பான விதிகள், இந்த இஸ்ரேல் பயணத்தின்போது மீறப்பட்டிருப்பதாக மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பயணத்தில் நோக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பது போன்ற எந்த ஒரு நிபுணத்துடன் கூடிய இணை ஊடகமும் இஸ்ரேலிடம் இல்லை என்று கூறிய மனுதாரர்கள், “அரசு அதிகாரிகள் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டதன் உண்மையான நோக்கம், பெகசிஸ் மென்பொருளை வாங்குவதற்காக தான் இருந்தது என குற்றம்சாட்டினர்.

மனுவை விசாரித்த பம்பாய் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா, நீதிபதி ஜி.எஸ். குல்கர்னி அடங்கிய அமர்வு, வழக்கில் மகாராஷ்டிரா அரசு, தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநரகம் மற்றும் பயணம் மேற்கொண்ட அதிகாரிகளை எதிர்தரப்பினராக நீதிமன்றம் இணைத்துள்ளது.

மேலும், இது தொடர்பாக அவர்களது பதிலைத் தெரிவிக்க நான்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Source : The Wire

தொடர்புடைய செய்திகள் :

பெகசஸ் விவகாரம் எதிரொலி : “எல்கர் பரிஷத் வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும்“ – முன்னாள் காவல்துறை அதிகாரிகள்

பெகசிஸ் விவகாரம் : பஞ்சாப் மனித உரிமைச் செயற்பாட்டாளர் வேவு பார்க்கப்பட்டது ஆம்நெஸ்ட்டி ஆய்வில் உறுதி

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்