Aran Sei

புதிய தகவல்தொழில்நுட்ப விதிகளுக்கு ஏன் இடைக்கால தடை விதிக்கக் கூடாது – ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021ஐ அமல்படுத்துவதற்கு ஏன் இடைக்கால தடை விதிக்க கூடாது  என்று கேள்வி எழுப்பிய மும்பை உயர்நீதிமன்றம் அது குறித்து பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தி லீஃப்லெட் இணையதளம் மற்றும் ஊடகவியலாளர் நிகில் வாக்லே தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி ஜி.எஸ்.குல்கர்னி அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

புதிய விதிமுறைகள் தெளிவற்றதாகவும் கொடூரமானவையாகவும் உள்ளன என்றும்,  அரசியலமைப்பால் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்தை பறிக்கும் வகையில் உள்ளன என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வழக்கில் ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங், ”இறுதி  விசாரணைக்கு முன்பாக தடை விதிக்க வேண்டாம்” என வாதிட்டுள்ளார்.

ஆன்லைன் ஊடகத்தை ஒழுங்குபடுத்த நினைக்கும் செயல் ஒரு எதேச்சதிராக முயற்சி என வாதிட்ட் தி லீஃப்லெட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டேரியஸ் கம்பேடா, “தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் விதிகள், அரசியலமைப்பின் 19வது பிரிவுகீழ் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பாற்ப்பட்டவை” எனக் கூறியுள்ளார்.

புதிய விதிகளை எதிர்க்கும் இது போன்ற மனுக்கள் நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஒன்றிய அரசு இந்த மனுக்களுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இடைக்கால தடை விதிக்கப்படாவிட்ட்டால் மனுதாரர்களை இணையத்தில் பதிவிடும்போது பாதகமான நடவடிக்கைகள்குறித்து ’தொடர்ந்து அச்சப்படுவார்கள்’ என தெரிவித்தனர்.

இடைக்காலத் தடை ஏன் விதிக்கக் கூடாது என்பது குறித்த குறுகிய பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்குல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ள நீதிபதிகளை வழக்கை ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்கு உத்தரவிட்டுள்ளார்.

Source : The Wire

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்