Aran Sei

போதைத் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதாகியிருக்கும் ஷாருக்கான் மகன் –  ஷாருக்கானுக்கு பாலிவுட் பிரபலங்கள் ஆதரவு

போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டிருக்கும் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஆதரவாக பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மும்பையில் இருந்து கோவா சென்ற சென்ற கப்பலில் நடைபெற்ற பார்ட்டியில் போதைப் பொருள் பயன்படுத்தியாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட மூன்று பேரைப் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் (என்சிபி) கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் சினிமா பிரபலங்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

லக்கிம்பூர் வன்முறை: ‘உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் கோருவது இழப்பீட்டை அல்ல நீதியை’- பிரியங்கா காந்தி

பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி பதிவிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில்,”எங்குச் சோதனை நடைபெற்றாலும், அங்குச் சிலர் கைது செய்யப்படுவார்கள். அதை வைத்து நாம் முன்முடிவிற்கு வந்து விடுகிறோம். இன்னும் விசாரணை முடியவில்லை. ஆர்யன் கானை சுவாசிக்க விடுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

மேலும்,”பாலிவுட்டில் என்ன நடந்தாலும், ஊடகங்கள் விசாரணை நடத்தி தீர்ப்பு எழுதி விடுகின்றன. ஆர்யன்கானிற்கு வாய்ப்பு வழங்குங்கள். உண்மை வெளியே வரட்டும். ஆர்யனை பாதுகாப்பது நம் கடமை” என பதிவிட்டுள்ளார்.

நடிகையும் பின்னணி பாடகியுமான சுசித்திரா கிருஷ்ணமூர்த்தி பதிவிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “குழந்தைகள் கஷ்டத்தில் இருப்பதை பார்ப்பதை விட பெற்றோர்களுக்குக் கடினமானது எதுவுமில்லை. அனைவருக்கும் பிரார்த்தனைகள்” என தெரிவித்துள்ளார்.

மேலும், “பாலிவுட்டை குறிவைப்பவர்கள் அனைவருக்கும். பாலிவுட் திரை பிரபலங்கள் இடங்களில் என்சிபி நடத்திய சோதனைகள் நினைவிருக்கிறதா? எதையும் கைப்பற்றவில்லை. எதையும் நிரூபிக்கவில்லை. பாலிவுட்டின் புகழில் பொறாமைப்பட்டு இது போன்ற செயல்கள் நடத்தப்படுகிறன” என்று கூறியுள்ளார்.

விவசாயிகள்மீது மோதிய பாஜக எம்.பி.யின் கார் – இன்னொரு லக்கீம்பூராக ஹரியானாவை மாற்றும் முயற்சி என விவசாயிகள் குற்றச்சாட்டு

திரைப்படை இயக்குநர் பூஜா பட், “இந்த கஷ்டமான சூழ்நிலையில் என் ஆதரவை ஷாருக்கானிற்கு தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு இது தேவைப்படாது, இருந்தாலும் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவும் கடந்து போகும்” என குறிப்பிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் ஹன்சல் மேத்தா பதிவிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “ஒரு குழந்தை பிரச்னையில் சிக்கிக் கொல்வதை பெற்றோர் கையாளுவது வேதனை அளிக்கிறது. சட்டம் அதன் கடமையைச் செய்யும் முன்பே மக்கள் தீர்ப்பை எழுதி விடுவதால் சிக்கல் இன்னும் அதிமாகிறது. இது பெற்றோர்கள் மற்றும் குழந்தை- பெற்றோர் உறவுக்கு அவமரியாதையானது மற்றும் நியாயமற்றது” என பதிவிட்டுள்ளார்.

ஆர்யன் கானிற்கு ஆதரவாக பாடகர் மிகா சிங், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் ஆகியோரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆர்யான் கானிற்கு நடிகர் ரித்திக் ரோஷன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “அன்புள்ள ஆர்யன். வாழ்க்கை வித்தியாசமானது. அது அற்புதமானது, ஏனெனில் அது நிச்சயமற்றது. அது உங்களுக்கு ஏற்ற இறக்கங்களை வழங்கும், காரணம் கடவுள் அன்பானவர். அவர் கடினமானவர்களுக்கு மட்டுமே கடினமான நிலைமையைக் கையாள தேர்ந்தெடுப்பார். தற்போது இருக்கும் அழுத்தத்தை உன்னால் உணர முடியும், கோபம், குழப்பம், உதவியற்ற தன்மை ஆகியவை உனக்குள் இருக்கும் ஹீரோவை உருவாக்கும் சக்தி கொண்டது. ஆனால் கவனமாக இருக்கு அவை உனக்குள் இருக்கும் கருணை, இரக்கம், அன்பு போன்றவற்றையும் எரிக்கவல்லது.” என கூறியுள்ளார்.

டெல்லி கலவர வழக்கில் காவல்துறையை கேள்வி எழுப்பிய நீதிபதி – பணியிட மாற்றம் செய்த டெல்லி உயர்நீதிமன்றம்

மேலும், “இந்தத் தருணம் தான் உன்னுடைய நாளையை உருவாக்கும். எங்கு ஒரு சூரியன் பிரகாசமாக பிரகாசிக்கும். ஆனால், அதற்கு நீ இருட்டுக்குள் பயணிக்க வேண்டும். ஒளியை நம்பு. அது, எப்போதும் இருக்கிறது. உனக்கு என் அன்புகள்” என தெரிவித்துள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்