Aran Sei

டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியலின சிறுமி – நீதி கோரும் திரைக்கலைஞர்கள்

Representational image

டெல்லியில் 9 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக திரைக்கலைஞர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 1 அன்று  சுடுகாட்டிற்கு தண்ணீர் எடுக்க சென்ற சிறுமி திரும்பி வராதததை அடுத்து சந்தேகப்பட்ட அவரது தாயார் அங்கு சென்று பார்த்த போது அந்த சிறுமி உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில்,தண்ணீரை குளிர்விக்கும் சாதனத்தில் இருந்து மின்சாரம் தாக்கிச் சிறுமி உயிரிழந்ததாக பூசாரி  ராதே ஷ்யாம் மற்றும் அங்குள்ள சுடுகாட்டின்  ஊழியர்கள் சலீம், லக்‌ஷ்மி நாராயன், குல்தீப் ஆகியோர் கூறியுள்ளனர்.

ஆனால், சிறுமியின் உடலைக் கண்ட அவரது தாயார் சிறுமியின் மணிக்கட்டில் மற்றும் முழங்கையில் தீக்காயங்கள் மற்றும் உதடுகள் நீல நிறத்தில் இருந்ததையும் அவர் கவனித்துள்ளார்.

இதனையடுத்து,  பூசாரி  ராதே ஷ்யாம், மற்றும் ஊழியர்கள் சலீம், லக்‌ஷ்மி நாராயன் மற்றும் குல்தீப் தான் ஆகியோர்  சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ததாக  குற்றம்சாட்டு எழுந்த நிலையில் டெல்லி கன்டோன்மெண்ட் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திரைக்கலைஞர் ஸ்வரா பாஸ்கர், “9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, கொல்லப்பட்டு, வற்புறுத்தி தகனம் செய்யப்பட்டுள்ளார். வன்கொடுமை செய்வதர் பூசாரி, வன்கொடுமை செய்யப்பட்ட பெண் தலித் , இது தலைநகரில் நடந்துள்ளது”. என்று குறிப்பிட்டுள்ளார் .

இதேபோன்று , திரைக்கலைஞர் ஊர்மிலா மடோந்துகர் வெளியிட்டுள்ள பதிவில், #டெல்லிகான்ட்பெண்ணிற்குநீதிவேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது, சுசாந் சிங் வெளியிட்டுள்ள பதிவில், குற்றவாளிகள் தப்பித்து விடுவது குறித்து கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்