Aran Sei

கர்நாடகா: உக்ரைனிலிருந்து இந்தியா வந்தடைந்தது மாணவர் நவீனின் உடல்

ஷ்யா-உக்ரைன் போரின்போது, மார்ச் 1ஆம் தேதி கார்கிவ் நகரில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இந்திய மாணவர் நவீனின் உடல் இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்று (மார்ச் 20), காலை, பெங்களூரு விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட போது, நவீனின் குடும்பத்தினர், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மாநில அரசு அதிகாரிள் ஆகியோர் விமான நிலையத்தில் இருந்துள்ளனர். நவீனின் உடலை ஏற்றி வந்த விமானம் பெங்களூரு விமான நிலையத்திற்கு அதிகாலை 3:00 மணியளவில் தரையிறங்கியுள்ளது.

அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மரியாதை செய்ததைத் தொடர்ந்து, நவீனின் குடும்பத்தினர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்தியா கொண்டு வரப்படும் நவீனின் உடல் : உடலை மருத்துவமனைக்கு தானம் செய்ய பெற்றோர் முடிவு

அதைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், மார்ச் 1 அன்று கார்கிவ் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 21 வயது மாணவர் நவீன், உணவு வாங்கச் சென்றபோது, ​​நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக இந்திய வெளியுறவு துறை தெரிவித்திருந்தது.

“என் மகன் மருத்துவத் துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைத்தான், அது நடக்கவில்லை. குறைந்த பட்சம் அவனது உடலானது மருத்துவ மாணவர்களின் படிப்புக்குப் பயன்படும் என்ற எண்ணத்தில்தான், நாங்கள், மருத்துவ ஆராய்ச்சிக்காக நவீனின் உடலை தானம் செய்ய முடிவு செய்துள்ளோம்” என்று நவீனின் தந்தை சங்கரப்பா கூறியிருந்தார்.

Source: ANI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்