Aran Sei

உ.பி.யில் 8 வயது தலித் சிறுமி கொலை – பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு

Representational image

த்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் பள்ளிக்குச் சென்ற 8 வயது தலித் சிறுமியின் உடல் வயலிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள காவல்துறையினர், காலை 8 மணியளவில் பள்ளிக்குச் சென்ற சிறுமியின் புத்தகப்பை சாலையோரம் கிடந்துள்ளதை அவ்வழியே சென்றவர்கள் கண்டதை அடுத்து இந்த விவகாரம் தெரியவந்துள்ளது.

திருவாரூர் மத்தியப் பல்கலைகழக தமிழ்த்துறையில் சமஸ்கிருத ஆசிரியர் – தமிழ்த்துறையில் சமஸ்கிருத திணிப்பா?

இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் தேடிய நிலையில், சிறுமியின் சடலம் வயலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து  சிறுமியின் குடும்பத்தினர், சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர், உடல் கூராய்விற்கு சிறுமியின் தர மறுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

‘சூழலியல் பாதிப்பு ஏற்படுத்திய குவாரிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும்’ – சென்னை உயர்நீதிமன்றம்

இதுகுறித்து தெரிவித்துள்ள மூத்த காவல்துறை அதிகாரி, நள்ளிரவு சிறுமியின் உடல் கூராய்விற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள்  வந்தததற்கு பின்னர் தான் எதுவும் கூற முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Source:The indian express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்