Aran Sei

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள், பாதுகாப்பு படையினர் மோதல் – 22 பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு

த்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் பகுதியில் மாவோயிஸ்ட்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் 22 பாதுகாப்பு படைவீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

சனிக்கிழமை (ஏப்ரல் 3) நடைபெற்ற மோதலில் பலர் காணாமல் போய் இருப்பதாகவும், இதுவரை 17 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் பிஜப்பூர் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அசாமில் வேட்பாளர் கட்சி மாறிய விவகாரம் – தமுல்பூரில் தேர்தலை தள்ளிவைக்க உச்சநீதிமன்றத்தில் மனு

இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிவிட்ட ட்விட்டர் பதிவில், “சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் நடைபெற்ற மோதலில் உயிர்தியாகம் செய்த எங்கள் துணிச்சலான பாதுகாப்புப் படைவீரர்களின் தியாகங்களுக்கு நான் தலைவணங்குகிறேன். அவர்களின் வீரத்தை தேசம் ஒருபோதும் மறக்காது. அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். அமைதி மற்றும் முன்னேற்றத்தின் எதிரிகளுக்கு எதிராக நாம் தொடர்ந்து போராடுவோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

”சத்தீஸ்கரில் உயிர் தியாகம் செய்த தியாகிகளின் குடும்பங்களுக்கு எனது இரங்கல். காணாமல் போன வீரர்களைக் கண்டுபிடித்து மீட்பதற்கு தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். காயமடைந்தவர்களை விரைவாக மீட்பதற்கான சிறந்த கவனிப்பை உறுதி செய்யுமாறு நான் மாநில அரசிற்கு வேண்டுகோள் விடுக்கின்றேன்.” என பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா காந்தியின் ட்விட்டர் பதிவில்”சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுடன் சண்டையிட்டு உயிரிழந்த துணிச்சலான வீரர்களுக்கு நான் வணக்கத்தைச் செலுத்திக் கொள்கிறேன். இந்தச் சம்பவத்தில் நாடு முழுவதும் சோகமாகவும் கோபமாகவும் இருக்கிறது. துணிச்சலான வீரர்களின் தியாகத்தை நாடு எப்போதும் நினைவில் வைத்திருக்கும். இந்த மணிநேர துக்கத்தில் தியாக வீரர்களின் குடும்பங்களுக்குக் கடவுள் ஆதரவளிப்பார், காயமடைந்தவர்களுக்கு உடனடி சுகாதார நலன்கள் கிடைக்கும்.” என பதிவிட்டுள்ளார்.

சுக்மா, பிஜப்பூர் பகுதிகளில் உள்ள 5 முகாம்களைச் சேர்ந்த 2000க்கும் அதிகாமான வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது மோதல் ஏற்பட்டது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்