Aran Sei

ஆற்றில் வீசப்படும் சடலங்களைத் தொடர்ந்து, உ.பியில் சட்டத்திற்குபுறம்பாக புதைக்கப்படும் சடலங்கள் – விசாரணைக்கு உத்தரவு

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்கள், பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் உள்ள கங்கை கரை கிராமங்களில் ஒதுங்கி வரும் நிலையில், உத்தரபிரதேசத்தில் சட்டத்திற்குபுறம்பாக சடலங்கள் புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில், கொரோனா தொற்றால் மரணமடைந்தவர்களை எரிக்க மயானங்களில் இடம் கிடைக்காததால், இறந்தவர்களின் சடலங்களை, அவர்களின் உறவினர்கள் கங்கை ஆற்றில் விட்டுவிடுவதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், உத்தரபிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் சட்டத்திற்குபுறம்பாக புதைக்கப்பட்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கங்கை ஆற்றங்கரையிலிருந்து சிறிது தூரத்தில், இறுதிச் சடங்கு செய்யப்பட்ட நிலையில் வரிசையாக சடலங்கள்  புதைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கங்கையாற்றில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளின் சடலங்கள் : ஆம்புலன்ஸில் கொண்டு வந்து கொட்டுவதாக மக்கள் வேதனை

இதுதொடர்பாக, உன்னாவ் மாவட்ட காவல்துறையினர் அமைத்துள்ள சிறப்புக் குழு விசாரணையை மேற்கொண்டு வரும் வேளையில், மேலும் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதா என்றும் தேடப்படுகிறது.

இதுகுறித்து, அம்மாவட்ட நீதிபதி ரவீந்தர் குமார் கூறுகையில், “சடலங்கள் ஆற்றிலிருந்து வெகு தூரத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றன. அதை சுற்றியுள்ள மற்ற பகுதிகளிலும் இதுபோல சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கிறதா என்று தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த  சிறப்புக் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளேன். அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

Source: ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்