Aran Sei

பி.எம் கேர்ஸ்: பேரிடர் காலத்திலும் மக்களுக்காக நிதியை செலவழிக்காத பிரதமர் – ஆய்வில் அம்பலம்

2020 மார்ச் 27 முதல் 2021 மார்ச் 31 வரை பி.எம் கேர்ஸ் நிதியால் வசூலிக்கப்பட்ட 10,990 கோடியில் 7,014 கோடி(64%) பயன்படுத்தப்படாமல் உள்ளது. 3,976 கோடி(36%) மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என என்.டி.டி.வி தெரிவித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த கணக்கியல் நிறுவனமான சார்க் மற்றும் அசோசியேட்ஸ், இந்த தரவுகளை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில், மார்ச் மாதம் கொரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கிய போது, பிரதமர் நரேந்திர மோடி பி.எம் கேர்ஸ் நிதியை அறிமுகப்படுத்தினார். கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு உதவி செய்ய, மக்கள் இத்திட்டத்தின் வழியே பணம் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

2020 நிதியாண்டிலிருந்து 3,077 கோடி ரூபாயும், அந்த இருப்புத் தொகையின் வட்டியாக 235 கோடி ரூபாய் பெறப்பட்டது. இவற்றில் வெளிநாடுகளிலிருந்து 495 கோடி ரூபாய் பெறப்பட்டது. 2021 இல் 7,679 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெறப்பட்டதும் சேர்த்து மொத்தமாக 10,990 கோடி ரூபாய் பெறப்பட்டது.

6.6 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க 1,392 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 50,000 வென்டிலேட்டர்களை வாங்க 1,311 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டது. ஆனால் பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்கள் இல்லாததாலும், சரியாக இயங்காததாலும் பல வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் போது கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால் எண்ணற்றோர் உயிரிழந்ததை அடுத்து 162 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை அமைக்க 201.58 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிகளைப் பரிசோதிக்கும் அரசின் ஆய்வகங்களை மேம்படுத்த 20.41 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. பீகாரின் முசாபர்பூர் மற்றும் பாட்னாவில் 2 கொரோனா சிறப்பு மருத்துவமனைகளையும், பல மாநிலங்களில் ஆர்.டி-பி.சி.ஆர் மாதிரிகளைச் சோதிக்க 16 ஆய்வகங்களையும் அமைக்க 50 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டது.

2021 மார்ச் 31, வரை மட்டுமே நம்மிடம் தரவுகள் உள்ளன. பி.எம் கேர்ஸ் பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி பல கேள்விகளை ஒன்றிய அரசு பெற்றுள்ளது. இருப்பினும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து பி.எம் கேர்ஸ்க்கு விலக்கு அளிக்கும் ஆவணங்களில் உள்ள உட்பிரிவு குறித்து NDTV தெரிவித்ததை அடுத்து என்.டி.டி.வி தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச் சட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

Source : NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்