கடந்த ஆண்டு கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பைவிட இந்த ஆண்டு பன்மடங்கு உயரக்கூடும் என்று ப்ளூம்பெர்க் ஒப்பீனியன் ஆய்வு தெரிவிக்கிறது.
ஏறக்குறைய 137 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாகக் கடந்த ஏப்ரல் 18 அன்று மட்டும் 2,61,500 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆல்கஹாலால் கொரோனா தடுப்பூசியின் செயல் திறன் பாதிக்குமா? – கேள்விக்குப் பதிலளித்த மத்திய அரசு
அதுமட்டுமல்லாது, 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் தற்போது இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கடந்த ஏப்ரல் 13 அன்று, போபாலில் கொரோன தொற்றால் உயிரிழந்த 84 பேர் எரியூட்டப்பட்டதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது, ஆனால் 5 பேர் மட்டுமே இறந்ததாக அரசு தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
அதுமட்டுமல்லாது, B.1.617 கொரோனா வைரஸ் வகையைக் குறித்து முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், அதிக அளவிலான தொற்று விகிதங்கள், குறைந்த ஆன்டிபாடி எதிர்ப்புத்திறன், குறைந்த அளவிலான வைரஸ் மாதிரிகள் சேகரிக்கப்படுவது ஆகியவையும் மரணங்கள் அதிகரிக்க மிக முக்கிய காரணமாகும்.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மருத்துவ வசதிகளிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதோடு தடுப்பூசிஇருப்பு , படுக்கை இல்லாமை மற்றும் ஆக்சிஜன் சிலிண்டெர் போன்றவற்றில் தட்டப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், மயானத்தில் பிணங்களை எரிப்பதற்குக் கூட இடமில்லாத நிலை உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதே நிலை தொடருமானால் இந்தியாவில் ஒரு நாள் இறப்பு எண்ணிக்கை 3000 தொடக்கூடும் , தற்போது உள்ள இறப்பு விகிதத்தைவிட 10 மடங்கு அதிகரிக்கூடும் என மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் உயிரியலாளரான பிரமார் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா இரண்டாம் அலை அதிகரிக்கும் நிலையில் கும்பமேளாவில் 35 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். இதன் தீவிரத்தை உணர்ந்து பிரதமர் வீட்டில் இருந்துகொண்டு பிராத்திக்க வேண்டுமென நெடுநாட்கள் கழித்து கூறுகிறார்.
இந்த ஆண்டு இதுவரை 1.2 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர் இது கடந்த ஆண்டு கொரோனவால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு மடங்கு என்பதும் கவனிக்கத்தக்கது.
SOURCE; BLOOMBERG OPINION
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.