Aran Sei

விவசாயிகள் போராட்டம்: அரசாங்கம் சொல்வதை டிவிட்டர் நிறுவனம் கேட்க வேண்டும் – மத்திய அரசு எச்சரிக்கை

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ட்விட்டர் தளத்தில் தொடர்ச்சியாக பதிவிட்டு வந்த பலரின் கணக்குகளை முடக்கிய ட்விட்டர் நிறுவனம், அந்த கணக்குகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு  வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு அந்த ட்விட்டர் கணக்குகளை மீண்டும் முடக்காவிடில் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ட்விட்டர் நிறுவனத்தை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்து வந்த பல டிவிட்டர் கணக்குகளை, தகவல் தொழிற்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 ஏ-வின் கீழ் முடக்க வேண்டும் என்று, தகவல் தொழிற்நுட்பத்துறை அமைச்சகம் ட்விட்டருக்கு அறிவுறுத்தியது.

இதையடுத்து கிசான் ஏக்தார் மோர்ச்சா (விவசாயிகளின் போராட்டக் குழு), தி கேரவன் இணையதளம், பாரதிய கிசான் சங்கம், பிரசார் பாரதியின் முதன்மை செயல் அதிகாரி சஷி ஷேகர் வேம்பட்டி, ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜர்னெயில் சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சலீம், செயற்பாட்டாளர் ஹன்ஸ்ராஜ் மீனா உட்பட, நூற்றுக்கணக்கானோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. அத்துடன், 150 டிவீட்டுகளும் டிவிட்டர் தளத்திலிருந்து அகற்றப்பட்டன.

விவசாய போராட்டத்தை பதிவிட்டதால் கணக்குகள் முடக்கம்: யாருக்கு ஆதரவாக செயல்படுகிறது ட்விட்டர்?

டிவிட்டரின் இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், சமூக வலைதளங்களில் டிவிட்டர் நிறுவனத்திற்கு எதிராக எதிர்பபு கிளம்பியது. இந்நிலையில், முடக்கப்பட்ட அனைத்து கணக்குகளையும் டிவிட்டர் நிறுவனம் விடுவித்தது.

இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள மத்திய அரசு, அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் மத்தியில் ஒரு இடைத்தரகராக செயல்படும் டிவிட்டர் நிறுவனம், அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் படி தான் செயல்பட வேண்டும் என்றும், அவ்வாறு செயல்படவில்லையெனில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

முடக்கிய கணக்குகளை மீண்டும் செயல்படுத்திய ட்விட்டர் – ஒரே நாளில் பல்டி

டிவிட்டரால் முடக்கப்பட்ட கணக்குகளில் பதிவிடப்பட்டுள்ள கருத்துக்கள்,  உணர்ச்சிகளைத் தூண்டுவதாகவும், வெறுப்பை பரப்புவதாகவும், சமூகத்தில் பதற்றத்தை உருவாக்குவதாகவும் இருப்பதாக அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. அந்த கணக்குகளில் வெளியிடப்பட்ட கருத்துக்கள், உண்மைக்கு புறம்பானது என்று கூறியுள்ள மத்திய அரசு, அவ்வாறு சமூக வலைதளத்தில் பதிவிடுவது கருத்து சுதந்திரம் இல்லை எனவும் சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது எனவும் கூறியுள்ளது.

கிசான் ஏக்தா மோர்ச்சா பக்கம் முடக்கம் – பாஜக கூட்டணியில் ஃபேஸ்புக் நிறுவனம்?

தகவல் தொழிற்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ-வின் படி, இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்பு ஆகியவற்றிற்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களை அரசாங்கம் முடக்கலாம் என தெரிவித்துள்ளது.

ஏலத்திற்கு வரும் ஏர் இந்தியா – விற்பனைக்கு வரும் பொதுத்துறை நிறுவனங்கள்

எனவே, அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் டிவிட்டர் நிறுவனம் முடக்கிய அனைத்து கணக்குகளும் மீண்டும் முடக்கப்பட வேண்டும் என டிவிட்டர் நிறுவனத்தை எச்சரித்துள்ள மத்திய அரசு, அதை டிவிட்டர் நிறுவனம் செய்ய தவறும் பட்சத்தில், கடுமையான சட்ட சிக்கல்களை சந்திக்க நேரும் எனவும் தெரிவித்துள்ளதாக என்டிடிவி வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்