Aran Sei

மகாராஷ்டிரா : கொரோனாவிலிருந்து தப்பி ’கருப்பு பூஞ்சை தொற்று’க்கு பலியிலான 52 பேர்

காராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்த 52 பேர் ‘பிளாக் ஃபங்கஸ்’ என்று அறியப்படுகிற  கருப்பு பூஞ்சை தொற்றால் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட சிலரிடம் தலைவலி, காய்ச்சல், கண்களில் வலி மற்றும் மூக்கடைப்பு மற்றும் பகுதியளவிலான பார்வை குறைபாடு ஆகிய அறிகுறிகளாக பிளாக் ஃபங்கஸ் தொற்று வெளிப்படுகிறது என்றும் கொரோனா சிகிச்சையின்போது ஸ்டீராய்டு மருந்து அளிக்கப்பட்டிருந்தால்,  பிளாக் ஃபங்கஸ் தொற்று  ஏற்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது என்றும் அறிவியல் துறையினர்  கருத்து தெரிவிக்கின்றனர்.

மாட்டுச் சாணத்தை பயன்படுத்துவது பூஞ்சை நோயை ஏற்படுத்தலாம் – அமெரிக்க தொற்றுநோய் மருத்துவர் எச்சரிக்கை

முதல்முறையாக ‘ப்ளாக் ஃபங்கஸ்’ நோயால் உயிரிழந்தவர்கள் பட்டியலை அம்மாநில அரசு தொகுத்துள்ளதாக வரும் செய்திகளுக்கிடையில்,  ”2020 ஆம் ஆண்டு கொரோனா முதல் அலையில் ப்ளாக் ஃபங்கஸ் தொற்றால் மகாராஷ்டிராவில் சிலர் உயிரிழந்த நிலையில், இரண்டாவது அலையில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது” என்று  சுகாதார துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்தார்.  மேலும், ”மகாராஷ்டிர மாநிலத்தில் 1500 பேர் பிளாக் ஃபங்கஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் ப்ளாக் ஃபங்கஸ் நோய் மேலும் சுகாதாரத்துறைக்கு சுமையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொற்றை சமாளிக்க ஒரு லட்சம் ஆம்போடெரிசின்-பி ஆன்டி வைரஸ் மருந்துகளுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்