Aran Sei

மருத்துவமனையில் இனவேற்றுமை: உயிரிழந்த ஆஃப்ரிக்க – அமெரிக்க மருத்துவர்

கொரொனாவால் பாதிக்கப்பட்ட ஆஃப்ரிக்க-அமெரிக்க பெண் மருத்துவர், மருத்துவர்களால் இன ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்ததாக நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

அமெரிக்காவில் உள்ள இண்டியானாபோலிஸ் நகரைச் சேர்ந்தவர் சூசன் மூர். இம்மாத தொடக்கத்தில், கொரொனா தொற்று ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு, மருத்துவமனையில் தனக்கு முறையே சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பது குறித்து தொடர்ந்து தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்து வந்தார் சூசன். 

இந்தியப் பெண்கள் ‘தரைமட்டம்’ – அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சன்

“மருத்துவரிடம் ரெம்டெசிவிர் (மருந்து) கேட்டதற்கு, என்னுடைய நெஞ்சுப்பகுதியின் எக்ஸ்-ரே-வில் எந்த பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை என்று மருத்துவர் பேனக் கூறினார். அதன் பிறகு எனக்கு மறுபடியும் ஸ்கேன் செய்யுங்கள் என கெஞ்ச வேண்டியதாக இருந்தது. மறுபடி ஸ்கேன் செய்த போது, என்னுடைய நுரையீரலில் பிரச்சினை இருப்பது தெரிந்தது. அதற்கு பிறகு எனக்கு ரெம்டெசிவிர் கிடைத்தது” என சூசன் தனது ஃபேஸ் புக்கில் பதிவிட்டுள்ளார்.

“எனக்கு எதனால் கழுத்து வலியும் மூச்சுத் திணறலும் இருக்கிறது என்று அவருக்கு தெரியவில்லை. அவர் என்னுடைய நுரையீரலை பரிசோதிக்கவில்லை,பரிசோதனை செய்வதற்காக கூட அவர் என்னை தொடவில்லை” என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இஸ்லாமிய வெறுப்புணர்வு

மருத்துவரிடம் தன்னுடைய நிலைமை குறித்து வாதாடிய பிறகு தான் முறையான பரிசோதனைகள் செய்யப்பட்டன எனும் சூசன், “என்னுடைய வலிக்கு சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என்றால், எனக்கு உண்மையாகவே உடல்நிலை முடியவில்லை என்று நான் நிரூபிக்க வேண்டுமா?” என்று அந்த பதிவில் கேள்வி எழுப்புகிறார்.

சூசனின் இந்த கேள்வி, மருத்துவம் படித்த ஒரு ஆஃப்ரிக்க-அமெரிக்கர், மருத்துவமனைகளில் இப்படி நடத்தப்படுகிறார் என்றால், மருத்துவ சொல்லாடல்களை பயன்படுத்த தெரியாத பிற சிறுபான்மையினர் எப்படி நடத்தப்படுவார்கள் எனும் வேதனையையும், அச்சத்தையும் சுமந்து நிற்கிறது என்று நியூயாக் டைம்ஸ் கூறுகிறது. 

ரூத் ஜின்ஸ்பர்க் : அமெரிக்க உச்சநீதி மன்றத்தில் பெண்ணுரிமை போராளி

சூசன் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்ற சில நாட்களிலேயே மீண்டும் உடல்நிலை மோசமனதும், வேறொரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அப்போது சூசனுக்கு கடுமையான இருமல் இருந்ததென அவருடைய மகன் மொஹமது நியூ யார்க் டைம்ஸிடம் தெரிவித்துள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்ட சூசன் பிறகு வெண்டிலேட்டருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காததால், 52 வயதான சூசன் மூர் நேற்று உயிரிழந்தார். ஜமைக்காவில் பிறந்து, அமெரிக்காவில் படித்து மருத்துவரான சூசன், மருத்துவமனையில் இருந்த இன வேற்றுமை குறித்து பதிவு செய்திருந்த ஃபேஸ்புக் வீடியோ இப்போது வைரலாகியுள்ளது என்பது வேதனைக்குரியது. 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்