Aran Sei

ஒன்றிய உள்துறை இணை அமைச்சருக்கு சொந்தமான கார் உள்ளிட்ட 3 கார்கள் மோதல் – 4 விவசாயிகள் உயிரிழப்பு

க்கிம்பூர் கெரி வன்முறை குறித்து விவாதிக்க கூட்டப்பட்ட பாரத கிசான் யூனியனின் கூட்டத்தில், இவ்வன்முறையை கண்டித்து நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று (அக்டோபர் 3), உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாய சட்டங்களை நீக்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது, ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையை முடக்கியுள்ளனர்.

அப்போது, அஜய் மிஸ்ராவுக்கு சொந்தமான ஒரு கார் உட்பட மூன்று கார்கள், போராடிய விவசாயிகள் மீது மோதியதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அதைத்தொடந்து, நடந்த வன்முறையில் நான்கு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

‘லக்கிம்பூர் கெரி வன்முறை’ – ஒன்றிய உள்துறை இணை அமைச்சரை கைது செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

கூட்டம் தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பாரத கிசான் யூனியனின் ஊடக பொறுப்பாளர் தர்மேந்திர மாலிக்,  “யூனியனின் தேசிய தலைவர் நரேஷ் திகாயத் தலைமையில் சிசௌலி கிராமத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இவ்வன்முறையைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாக அலுவலகங்களுக்கு வெளியே விவசாயிகள் குழுக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தும்” என்று கூறியுள்ளார்.

“நேற்று இரவு பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ் திகைத் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் யுனியன் ஆதரவாளர்கள் கொண்ட குழு வன்முறை நடந்த லக்கிம்பூர் கேரி பகுதிக்கு சென்றோம். உத்தரபிரதேச காவல்துறையினர் எங்களைத் தடுக்க முயன்றனர். பல இடங்களில் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. காவல்துறை அதிகாரிகள் வாகனங்களைச் சோதிக்கத் தொடங்கினர். முன்னூறுக்கும் மேற்பட்டோரைக் கொண்ட எங்கள் குழு இத்தடைகளை தாண்டி முன்னேற முயன்றபோது, பலர் எங்களுடன் இணையத் தொடங்கினர்.” என்று அவர் கூறியுள்ளார்.

‘டெல்லி ஜந்தர் மந்தரில் சத்தியாகிரகம் செய்ய அனுமதியளிக்க வேண்டும்’ – உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் மனு

இக்கூட்டத்தின்போது, இவ்வன்முறை தொடர்பாக விவசாய சட்டங்களை நீக்கக்கோரி போராடி வரும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின்  எடுத்த அடுத்தக்கட்ட நகர்வுகளை கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தர்மேந்திர மாலிக் குறிப்பிட்டுள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்