Aran Sei

‘60 டிராக்டர்கள், 1000 விவசாயிகளுடன் நாடாளுமன்றம் நோக்கி பெரும் பேரணி’- ராகேஷ் திகாயத் அறிவிப்பு

வம்பர் 29 அன்று, 60 டிராக்டர்களுடன் நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் டிராக்டர் பேரணி செல்வோம் என்று பாரதிய கிசான் யூனியனின் தேசிய செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத் அறிவித்துள்ளார்.

நேற்று(நவம்பர் 23), இதுகுறித்து, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துடன் ராகேஷ் திகாயத் பேசுகையில், “நவம்பர் 29 அன்று, 60 டிராக்டர்களுடன் நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணி செல்வோம். அரசால் திறக்கப்பட்ட சாலைகள் வழியாக டிராக்டர்கள் செல்லும். சாலைகளை முடக்கி வைத்ததாக எங்கள்மீது குற்றம் சாட்டினார்கள். ஆனால், நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. சாலைகளை முடக்குவது எங்கள் பேராட்டத்தின் பணி அல்ல. ஒருவேளை, நாங்கள் அரசுடன் பேச வேண்டுமென்றால், நாங்கள் நேராக நாடாளுமன்றத்திற்கு செல்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

பட்டியல் சமூகப் பெண்ணை திருமணம் செய்ததால் வேலை பறிப்பு – வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு

“கடந்த முறை 200 பேர் சென்றது போலல்லாமல், இம்முறை ஆயிரம் பேர் நாடாளுமன்றம் நோக்கி செல்வார்கள். விவசாய விளைப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்தல் குறித்த ஒன்றிய அரசின் பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். கடந்த ஓர் ஆண்டில் நடந்த சம்பவங்களில், 750 விவசாயிகள் இறந்துள்ளனர். அதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Source: ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்