Aran Sei

‘பாஜகவை ஒன்றிய அரசில் இருந்து விவசாயிகள் அகற்றுவார்கள்’ – ராகேஷ் திகாயத்

விவசாய சட்டங்களை நீக்கி, விவசாய விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு  உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை இயற்றாவிட்டால் பாஜகவை ஒன்றிய அரசில் இருந்து விவசாயிகள் அகற்றுவார்கள் என்று பாரதிய கிசான் யூனியனின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஆகஸ்ட் 9), டெல்லி காசிப்பூர் எல்லையில், உத்தரபிரதேசம் , உத்தரகண்ட், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பாரதிய கிசான் யூனியன் தலைவர்களுடனான கூட்டத்தில் ராகேஷ் திகாயத் கலந்துக்கொண்டுள்ளார்.

இக்கூட்டம் தொடர்பாக, பாரதிய கிசான் யூனியன் வெளியிட்ட அறிக்கையில், “மூன்று விவசாய சட்டங்கள் விவசாய சட்டங்களை நீக்கி, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு  உத்தரவாதத்தை அளிக்கும் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து இந்தக் கூட்டம் நடைபெற்றது.” என்று தெரிவித்துள்ளது.

விவசாய சட்டங்களை ரத்து செய்யப்படாமலும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதமளிக்காமலும் இருந்தால், நாங்கள் பாஜகவை ஒன்றிய அரசிலிருந்து வெளியேறும்படி கட்டாயப்படுத்துவோம். நாங்கள் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளிடமும் சென்று பாஜகவை அம்பலப்படுத்துவோம். விவசாயிகளால் உருவாக்கப்பட்ட அரசானது விவசாயிகளுக்கு எதிரானதாக இருந்தால் அது ஆட்சியில் இருக்க தகுதியில்லை.” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், “நாங்கள் எந்தக் கட்சிக்கும் எதிரானவர்கள் அல்ல. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குழுவிற்கும் மட்டுமே நாங்கள் எதிரானவர்கள்.” என்று ராகேஷ் திகாயத் குறிப்பிட்டுள்ளார்.

Source: PTI

தொடர்புடைய பதிவுகள்:

“அரசியலமைப்பு சட்டத்தை இழிவுபடுத்திய பாஜகவுக்கு அம்பேத்கர் சிலையை திறந்து வைக்க உரிமை இல்லை” – ராகேஷ் திகாயத்

‘தேர்தலை மனதில் வைத்து விவசாய சட்டங்களை ஒன்றிய அரசு நீக்கலாம்’ – உ.பி பாஜக தலைவர் நம்பிக்கை

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி மூவர்ணக்கொடி யாத்திரை – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்