Aran Sei

‘விவசாயிகளின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டால்தான் நாங்கள் எங்கள் கிராமங்களுக்கு திரும்புவோம்’- ராகேஷ் திகாயத்

போராடும் விவசாயிகளிடத்தில் உள்ள பல கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அதற்குத் தீர்வு கண்டால்தான், நாங்கள் எங்கள் கிராமங்களுக்குத் திரும்புவோம் என்றும் பாரதிய கிசான் யூனியனின் தேசிய செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.

இன்று(நவம்பர் 22), உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில், போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா ‘விவசாயிகள் மகாபஞ்சாயத்தை’ ஏற்பாடு செய்துள்ளது.

அதில் கலந்துக்கொண்ட பின், செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள ராகேஷ் திகாயத், “மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டபின், போராடும் விவசாயிகளுடன் இனி பேச்சுவார்த்தையில் ஈடுபட தேவையில்லை என ஒன்றிய அரசு நினைக்கிறது. ஒன்றிய அரசு ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும், நீங்கள் உண்மையிலேயே நல்ல நோக்கோடுதான் விவசாய சட்டங்களை ரத்து செய்தீர்களேயானால், விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்துங்கள்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “விவசாய சட்டங்களை ரத்து செய்வதோடு நில்லாமல், விவசாய விளைப் பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும்படி சட்டமியற்ற வேண்டும். அவற்றோடு, விவசாயிகளிடத்தில் பல்வேறு கோரிக்கைகள் உள்ளது. அவை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதற்கு தீர்வு கண்டால்தான் நாங்கள் எங்கள் கிராமங்களுக்கு திரும்புவோம்” என்று பாரதிய கிசான் யூனியனின் தேசிய செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத்  தெரிவித்துள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்