Aran Sei

‘விவசாயிகளைக் கொன்ற ஒன்றிய அமைச்சரின் மகனும் தீவிரவாதிதான்’ – ராகேஷ் திகாயத்

க்கிம்பூர் கேரியில் விவசாயிகளை கொன்ற அஜய் மிஸ்ராவும் தீவிரவாதிதான் என்றும் அவரையும் ஆக்ரா சிறையில் அடைக்க வேண்டும் என்றும் பாரதிய கிசான் யூனியனின் செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.

நேற்று(நவம்பர் 22), செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள ராகேஷ் திகாயத், “காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளை ஆக்ரா சிறையில் அடைக்கிறார்கள். விவசாயிகளை கொன்ற அஜய் மிஸ்ராவும் தீவிரவாதிதான். அவரையும் ஆக்ரா சிறையில் அடைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

‘நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது காங்கிரஸ் மெகா பேரணி’ – பிரியங்கா காந்தி திட்டம்

லக்கிம்பூர் கேரியில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா தொடங்கி வைக்கவுள்ள சக்கரை ஆலை குறித்து பேசுவையில், “அஜய் மிஸ்ரா சக்கரை ஆலையைத் தொடங்கி வைக்க வந்தால், எந்தக் கரும்பும் ஆலைக்கு செல்லாது. மாறாக, மாவட்ட நீதிபதியின் அலுவலகத்திற்கு கரும்புகளை விவசாயிகள் எடுத்து செல்வார்கள். இதனால், விவசாயிகள் எவ்வளவு நஷ்டம் ஆனாலும் பரவாயில்லை” என்று பாரதிய கிசான் யூனியனின் செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத் கூறியுள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்