Aran Sei

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி மூவர்ணக்கொடி யாத்திரை – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

ரியானாவில் வரும் ஆகஸ்ட் 15 அன்று  மிகப்பெருமளவில்  ‘மூவர்ணக்கொடி யாத்திரை[Tiranga Yatras]  நடத்தவுள்ளதாக பாரதிய கிசன் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள  பாரதிய கிசன் சங்கத்தின் தலைவர் குர்ணம் சிங் சாதுணி, “சுதந்திரத் தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் மற்றும் வாகனங்களில் இந்த யாத்திரையை மேற்கொள்ள உள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே  பாரதிய கிசன் சங்கம்  தொடங்கிவிட்டது” என்றும் கூறியுள்ளார்.

மேலும், நடந்து வரும் வேளாண் போரட்டத்திற்கு உத்வேகம் அளிக்கும் வகையில்   இந்த யாத்திரையில்  அதிகப்படியான  விவசாயிகளைத் திரட்டக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளதாகவும் பாரதிய கிசன் சங்கத்தினர் கூறியுள்ளனர் .

ஹரியானா மாநிலத்தில்  இளைஞர்கள் மத்தியில் தேசப்பற்றை அதிகரிக்கும் வகையில் இரண்டு வாரக் காலத்திற்கு ‘மூவர்ணக்கொடி யாத்திரை’ நடத்தியுள்ளது. இந்த யாத்திரை வரும் ஆகஸ்ட் 14  முடிவடைய உள்ள நிலையில் இந்த யாத்திரையை விவசாயிகள் அதிகரித்துள்ளனர்.

ஹரியானா மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போரட்டத்தின் ஒரு பகுதியாகப் பாஜக – ஜே.ஜே.பி கட்சியின் தலைவர்களின்  கூட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும்   தி இந்து கூறியுள்ளது.

source: தி வயர்

தொடர்புடைய  பதிவுகள்:

ஒன்றிய அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக அணிதிரளும் வணிகர் சங்கங்கள் – ஒத்துழையாமை இயக்கம் தொடங்கிய நாளை இந்தியாவை பாதுகாப்போம் நாளாக கடைபிடிக்கத் திட்டம்

காவல் நிலையங்களில் மனித உரிமை அச்சுறுத்தல்கள் அதிகமாக உள்ளன – உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்