இந்தியஒன்றிய அரசசால் புதிய வேளான் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்ததையொட்டி காசியாபாத் ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய கிசான் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் ஒரு பகுதியாக 3 சட்ட நகல்களையும் எரித்துள்ளனர்.
புதிய வேளான் சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு ஆண்டு நிறைவை சம்பூர்ண கிராந்தி தினமாக அனுசரிக்க விவசாயிகள் சங்கத்தினர் திட்டமிட்டுருந்தனர்.
ஈழத் தமிழர்களை என்னவாக சித்தரிக்கிறது TheFamilyMan2 ? – ர. முகமது இல்யாஸ்
விவசாயிகள் கூட்டத்தில் பேசிய பாரதிய கிசான் சங்கத்தின் மாவட்ட தலைவர் பிஜேந்திர சிங், “ஒன்றிய அரசு விவசாயிகளை குறைத்து மதிப்பிடுகிறது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் எனக்கூறி விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறாமல் வீடு திரும்பமாட்டார்கள்” என தெரிவித்தார்.
பாஜக தலைவர்களின் வீடுகளுக்கு முன்னால் போராட்டம் நடத்த விவசாய சங்கத்தினர் முடிவு செய்திருந்தனர்.
இதனால் அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்திடாமல் தடுக்க மக்களவை உறுப்பினர் வி.கே. சிங், மாநில சுகாதார அமைச்சர் அதுல் கார்க் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வீடுகளுக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாக மூத்த காவல் கண்காணிப்பாளர் அமித் பதக் கூறினார்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.