Aran Sei

பாஜகவின் சூழ்ச்சி தமிழகத்தில் எடுபடாது – குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா

மிழ்நாட்டில் திமுக அரசு வலுவாக உள்ளதால் இங்குப் பாஜகவால் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்று குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மூ குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் அனைவரும் சேர்ந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடிவு செய்து யஷ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக அறிவித்தனர்.

ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் மீதான எஃப்.ஐ.ஆர் – புதிய குற்றச்சாட்டுகளை பதிவு செய்த டெல்லி காவல்துறை

குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட யஷ்வந்த் சின்ஹா அண்மையில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின் பல்வேறு கட்சிகளைச் சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு திரட்ட யஷ்வந்த் சின்ஹா இன்று சென்னை வந்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த யஷ்வந்த சின்ஹா, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன் வேட்புமனு தாக்கல் செய்த அடுத்த நாள் முதல் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று பல கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரி வருகிறேன். எப்போதும் நடக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலைப் போன்றது இல்லை. இப்போது நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தல் மிகவும் முக்கியமானது.

ஆசிரியரின் பணி திருப்தி அளிக்கவில்லை என்றால் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழும் இந்த நேரத்தில் நாம் இங்குப் பேசிக் கொண்டு இருக்கிறோம். நல்வாய்ப்பாக தமிழ்நாட்டில் வலுவான ஆட்சி உள்ளது. மத்திய அரசு என்ன முயன்றாலும் இங்கு ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. ஆனால், வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் அவர்கள் அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

நான் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டால் இதுப் போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க தேவையான அழுத்தம் கொடுப்பேன். நாட்டின் கூட்டாட்சி தத்துவம் சிக்கலில் உள்ளது. மாநில அரசுகளுக்கான உரிமை மறுக்கப்படுகிறது. ஆளுநர்களின் செயல்பாடு அரசியல் அமைப்புச் சட்டப்படி இருக்க வேண்டும், ஆளுநரின் அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. என்று தெரிவித்துள்ளார்.

Source: News18Tamil

சங்கிகள் மண்டையில் குட்டு வைத்த Supreme Court | Nupur Sharma Comment on Muhammad

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்