Aran Sei

அசாமில் சிஏஏ பற்றி வாய் திறக்காத பாஜக : குற்றம்சாட்டும் காங்கிரஸ் கூட்டணி

credits : the indian express

பாஜக அரசு, இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது, அசாம் தேர்தலில் மிகப் பெரிய ‘திருப்பத்தை’ ஏற்படுத்தப் போகிறது என்று எதிர்கட்சிகள் கூறுவதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

126 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்திற்கு மூன்று ( மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 16) கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த மார்ச் மாதம், முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது, இரண்டாம் (39 தொகுதிகள்) மற்றும் மூன்றாம் கட்ட (40 தொகுதிகள்) தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில், காங்கிரஸ் தலைமையில், அனைத்து இந்திய ஜனநாயக முன்னணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரேட்டட், அன்சலிக் கானா மார்ச்சா, போடாலாந்து மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இணைத்து மகாஜத் கூட்டணி உருவாக்கப்பட்டிருக்கது. பாஜக தலைமையில் அசாம் கானா பரிஷத் மற்றும் ஐக்கிய மக்கள் லிபரல் கட்சி இணைந்து போட்டியிடுகின்றனர்.

என்.ஆர்.சியில் விடுபட்டவர்களுக்கு ’நிராகரிப்பு சீட்டுகள்’– அசாம் அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை

அசாமில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட முன்னணி பாஜக தலைவர்கள், அசாம் மாநிலத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வருவது தொடர்பாக மட்டுமே பேசியதாகவும், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மறந்தும் யாரும் வாய் திறக்கவில்லை எனவும் என்டிடிவியின் செய்தி கூறுகிறது.

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் திருத்தம் கொண்டுவரப்படும் – பாஜகவின் அசாம் தேர்தல் அறிக்கை

அசாம் முதல்வர் சர்பானந்தா சோனாவால், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) போன்றவை பிரச்சனையே இல்லை எனவும் இது தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அசாம் பாஜகவின் மாநிலத் தலைவர், ரஞ்சித் குமார் தாஸ், “அசாமில், சிஏஏ விவகாரம், ஒரு பொருட்டே இல்லை. அதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதை அமல்படுத்துவோம்” என்று கூறியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், காங்கிரஸ், ஊடுருவக்காரர்களான அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் கூட்டணி வைத்திருப்பதாக மேடைதோறும் பாஜக விமர்சித்து வருகிறது.

‘குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி அசாம் மக்களிடம் பேச பாஜகவிற்கு தைரியம் இல்லை’ – பிரியங்கா காந்தி விமர்சனம்

இந்நிலையில், “சிறுபான்மை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், சிஏஏ விவகாரம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தேர்தலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தப் போகிறது. மக்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள். சிஏஏ விவகாரத்தால் தான் பாஜகவின் வேட்பாளர்கள் தேர்வு பாதிப்படைந்தது.” என்று காங்கிரஸ் தலைவர், காகேன் காலிடா கூறியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, அசாமில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அசாமில், காங்கிரஸ் வெற்றிப் பெற்றால், சிஏஏ அமல்படுத்தப்படாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்