Aran Sei

வங்கிக் கணக்கில் 15 லட்சம் போடுவது போன்ற பாஜகவின் வாக்குறுதிகள் அனைத்தும் ஏப்ரல் தின முட்டாள் நகைச்சுவைகளே: சஞ்சய் ராவத் கிண்டல்

பாஜக அரசு கடந்த 7 ஆண்டுகளாக மக்களை முட்டாளாக்கிப் பெறுகிறது. மக்களின் வங்கிக் கணக்கீழ் ரூ.15 லட்சம் செலுத்துவது உட்பட பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஏப்ரல் தின முட்டாள் நகைச்சுவைகளே என்று சிவசேனாவின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை ஜின்னா ஒருமுறைதான் பிரித்தார்; பாஜக தலைவர்கள் மக்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தி தினம் தினம் பிரிக்கின்றனர் – சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு

ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது, இதில் மக்கள் ஒருவருக்கொருவர் முட்டாள்களாக்கி விளையாடுவர்.

இந்த வகையில் கருப்புப் பணத்தை மீட்பது, ஒவ்வொரு மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவது, வேலைவாய்ப்பு வழங்குவது போன்ற பாஜக அரசின் வாக்குறுதிகள் மக்களை முட்டாளாக்கும் நகைச்சுவையைத் தவிர வேரல்ல என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

உ.பி தேர்தல்: பாஜகவின் வெற்றிக்கு உதவிய மாயாவதி, ஓவைசிக்கு பாரத ரத்னா விருது வழங்குக – சஞ்சய் ராவத் கிண்டல்

அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நீண்ட நாட்களாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டது. ஆட்சியாளர்கள் எப்போதும் சாமானியர்களை முட்டாளாக்குகிறார்கள் என்று சிவசேனாவின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

Source : newindianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்