Aran Sei

கொரோனாவைக் கட்டுப்படுத்தாமல் உ.பி. தேர்தலுக்கு திட்டம் வகுக்கும் பாஜக – சிவசேனா விமர்சனம்

த்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக  உழைத்து வருவதாக சிவ சேனா கட்சி குற்றம் சாட்டியுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் இடிக்கப்பட்ட 100 ஆண்டுகள் பழமையான மசூதி – உரிய நடவடிக்க எடுக்க வக்பு வாரியம் அரசிடம் வேண்டுகோள்

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான ‘சாமானா’ பத்திரிக்கையில் இதுகுறித்து செய்தி வெளியிடப்பட்டிருப்பதாகவும், மேற்குவங்கத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்தப் பிறகு அதன் கவனம் உத்தரபிரதேச மாநிலம் பக்கம் திரும்பிருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் ‘மிஷன் உத்தரப்பிரதேசம்’ என்ற கூட்டத்தை நடத்தியுள்ளனர்” என்றும் அந்த பத்திரிகையில் செய்தி வெளியிட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அரசின் நடவடிக்கைகளை விமர்சித்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி – வழக்கு பதிவு செய்த உத்தரபிரதேச காவல்துறை

பாஜகவின் இந்த நடவடிக்கை நாட்டின் அனைத்து பிரச்சனைகளும் முடிந்தது போல உத்தரபிரதேச தேர்தல் குறித்து கவனம் செலுத்துவது போல் உள்ளதாகவும் ‘சாமானா’ பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

மேலும், “பிரதிநிதித்துவ ஜனநாயகம் முக்கியமானது தான் ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது முக்கியமா?” என்றும் கேள்வியெழுப்பியுள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் தட்டுப்பாடு என நோட்டீஸ் வெளியிட்ட மருத்துவமனை – வழக்கு பதிவு செய்த உத்தரபிரதேச காவல்துறை

அதுமட்டுமல்லாது, நாடு தற்போது இருக்கும் சூழலில், கொரோனா தொற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றால், கங்கையாற்றில் இந்துக்களின் பிணம் மிதப்பதைத் தடுக்க முடியாது. இது நாட்டின் பிம்பத்திற்கு நல்லதல்ல என்றும் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான ‘சாமானா’ பத்திரிக்கையில் அறிவுறுத்தியுள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்