Aran Sei

‘உ.பி பஞ்சாயத்து தேர்தலில் பாஜக மோசடி செய்துள்ளது’ – யோகி ஆதித்யநாத் அரசுக்கு மாநில பாஜக தலைவர் கண்டனம்

ண்மையில் நடைபெற்ற உத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தலில் நடந்த வன்முறை தொடர்பாக உத்தரபிரதேச பாஜக செயற்குழு உறுப்பினர் ராம் இக்பால் சிங், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் அரசுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், பாஜகவுக்கும் மற்ற கட்சிகளுக்கும் இனி வேறுபாடு இருக்காது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து, நேற்று (ஜூலை 12), செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள அவர், “இது அடல்ஜியின் பாஜக அல்ல (மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்). நாங்கள் பாஜகவை மற்ற கட்சிகளுடன் வேறுபட்ட கட்சியாக அறிந்திருந்தோம். ஆனால், இப்போது அதை அழித்துவிட்டோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

உத்திரபிரதேச பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தின் பகுதியே மக்கள்தொகை கட்டுப்பாடு மசோதா – சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு

“இப்போது, ​​பாஜக கொள்கைகளுக்கும் மற்ற கட்சிகளின் கொள்கைகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இந்தப் பஞ்சாயத்து தேர்தலில் பாஜக மோசடிகளைச் செய்துள்ளது. லக்கிம்பூர் கெரியில் ஒரு பெண்ணுக்கு நடந்த சம்பவத்தை நினைத்தால், மகாபாரதத்தில் திரௌபதியின் சீலை உருவப்பட்டதை நினைவூட்டுகிறது. நேர்மையற்ற வழிகளைப் பயன்படுத்துவதனால், சில நாட்களுக்கு மட்டுமே நாம் நினைத்தது நடக்கும். நீண்ட காலத்திற்கு நடக்காது.” என்று ராம் இக்பால் சிங் கூறினார்.

எட்டாவாவில் வாக்கெடுப்பில் நடந்த வன்முறையைக் குறிப்பிட்டு பேசிய அவர், ஒரு காவல்துறை அதிகாரியை பாஜக கட்சி உறுப்பினர் ஒருவர் அறைந்த சம்பவத்துக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்