Aran Sei

தவறான தகவல்களை பரப்பும் பாஜகவினர் கைது செய்யப்பட மாட்டார்கள்: உண்மையை பேசும் முகமது ஜுபைர், டீஸ்டா செடல்வாட் கைது செய்யபடுகிறார்கள் – மம்தா பானர்ஜி

பாஜக தலைவர்கள் தவறான தகவல்களைப் பரப்பி, மற்றவர்களை அவமதிக்கும்போது, நீங்கள் அவர்களைக் கைது செய்ய மாட்டீர்கள். ஆனால் நாம் உண்மையைப் பேசினால், நாம் இலக்கு வைக்கப்படுவோம். அவர்கள் ஏன் பத்திரிக்கையாளர் முகமது ஜுபைரைக் கைது செய்தார்கள்? அவர் என்ன செய்தார்? டீஸ்டா செடல்வாட்டை ஏன் கைது செய்தீர்கள்? அவள் என்ன செய்தாள்? என்று மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

2002-ம் ஆண்டில் குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி விரைவுவண்டி ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 கரசேவகர்கள் உயிரிழந்தனர். இந்த படுகொலை சம்பவத்தை கண்டித்து குஜராத் மாநிலம் முழுவதும் வன்முறை வெடித்தன. இதுதொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரித்த நிலையில், அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி உட்பட 64 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

பத்திரிக்கையாளர் முகமது ஜுபைர் இஸ்லாமியர் என்பதால் தான் கைது செய்யப்பட்டுள்ளார்: வழக்கறிஞர் பிருந்தா குரோவர் கருத்து

இதை எதிர்த்து காங்கிரஸ் எம்பி ஜாப்ரி மனைவி ஜாகியா ஜாப்ரி என்பவர் வழக்கு தொடர்ந்தார். சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து குஜராத் கலவரம் தொடர்பாக போலி ஆவணங்கள், சாட்சியங்கள் வழங்கியதாக சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் வலதுசாரிகள் பரப்பும் போலி செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து அம்பலப்படுத்திய ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டார். 2018-ம் ஆண்டு மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ட்விட்டர் பதிவுகளை முகமது ஜுபைர் வெளியிட்டிருந்தார் என்ற புகாரின் அடிப்படையில் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி,”பாஜகவின் சமூக ஊடகங்கள் அனைத்தும் போலியான காணொளிகள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் மக்களை ஏமாற்றுகிறது. பாஜக தலைவர்கள் தவறான தகவல்களைப் பரப்பி, மற்றவர்களை அவமதிக்கும்போது, நீங்கள் அவர்களைக் கைது செய்ய மாட்டீர்கள். அவர்கள் மக்களைக் கொன்றாலும், அவர்கள் தொடப்பட மாட்டார்கள், ஆனால் நாம் உண்மையைப் பேசினால், நாம் இலக்கு வைக்கப்படுவோம். அவர்கள் ஏன் ஜுபைரைக் கைது செய்தார்கள்? அவர் என்ன செய்தார்? டீஸ்டாவை ஏன் கைது செய்தீர்கள்? அவள் என்ன செய்தாள்? இன்று உலகமே இதைக் கண்டிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Source : india today

ஓபிஎசை சமாளிக்க முடியாமல் திணறும் எடப்பாடி SP Lakshamanan Latest Interview

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்