Aran Sei

விவசாயிகளுக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் – போராட்டத்தை நிறுத்த அரசு முயற்சிப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

டெல்லி- உத்தரபிரதேச எல்லைப்பகுதியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளுக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த நவம்பர் 2020 ஆம் ஆண்டிலிருந்து விவசாயிகள் முகாமிட்டு விவசாயிகள் போராடிவரும் பகுதியில் பாஜகவினர் ஊர்வலமாகச் சென்றபோது இந்த மோதல் ஏற்பட்டதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் மனு – கோரிக்கையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள விவசாய சங்கத்தினர், விவசாயிகளின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் “அரசு மேற்கொண்டுள்ள மற்றொரு சர்ச்சைக்குரிய விஷயம்” என்று குற்றம்சாட்டியுள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து தெரிவித்துள்ள சம்யுக்த கிஷன் அமைப்பின் செய்தி தொடர்பாளர் பஜ்வா, “பாஜகவினர் விவசாயிகளிடம் தவறாக நடந்து கொண்டனர். அதுமட்டுமல்லாது, அவர்களது வாகனங்களை அவர்களே தாக்கிக் கொண்டனர். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிடலாம் என்று கடந்த காலத்தில் அரசு முயற்சித்ததைப் போன்று தற்போது முயற்சிக்கிறது. ஆனால், அது வெற்றியடையாது” என்று கூறியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘போராடும் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் சர்வாதிகார போக்கானது’ – வழக்குகளை திரும்பப் பெற விவசாயிகள் வலியுறுத்தல்

அதுமட்டுமல்லாது, இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கவுள்ளதாகவும், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதுகுறித்து எதிர்கால திட்டம் வகுக்கவுள்ளதாகச் செய்தி தொடர்பாளர் பஜ்வா குறிப்பிட்டுள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்