Aran Sei

தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த பாலியல் வன்கொடுமை குற்றவாளியின் மனைவி: நிராகரித்த பாஜக தலைமை

credits : pti

ன்னாவ் கூட்டுப் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குல்திப் சிங் செங்காரின் மனைவி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக அளித்த விருப்ப மனுவை பாஜக தலைமை நிராகரித்துள்ளதாக தி ஸ்க்ரால் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு, உத்தர பிரதேச மாநிலம் உன்னாவில் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளானார். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார், பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்டார் எனவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையின் மரணத்திற்கு காரணம் எனவும், கூறி நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு , சிறையில் அடைக்கப்பட்டார்.

சமீபத்தில், உத்தர பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தல் நான்கு கட்டமாக (ஏப்ரல் 15 தொடங்கி ஏப்ரல் 26) நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

உன்னாவ் சிறுமிகள் கொலை – செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் பர்கா தத் மீது வழக்கு

இந்தத் தேர்தலில், பாஜகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான, குல்தீப் செங்காரின் மனைவி சங்கீதா செங்கார், ஃபதேப்பூர் செளராசி தொகுயில் இருந்து போட்டியிடுவதற்காக விருப்ப மனுவை பாஜக தலைமையிடம் அளித்திருந்தார்.

உன்னாவ் சிறுமிகள் மரணம் – குடும்பத்தினர் மிரட்டப்படுகிறார்களா? – மறு பிரேதபரிசோதனை கோரும் சந்திரசேகர் ஆசாத்

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தின் பாஜக தலைவர் சுவதந்த்ரா தேவ் சிங், சங்கீதா செங்காரின் விருப்ப மனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், உன்னாவ் மாவட்ட தலைவரிடம் , புதிய மூன்று விருப்ப மனுக்களை தருமாறு உத்தரவிட்டுள்ளதாக தி ஸ்க்ரால் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு கொடுப்பதாக இருந்த ஜிலேபி, சமோசாக்கள் பறிமுதல்: தேர்தல் நடத்தை விதியை மீறியதாக 10 பேர் கைது

குல்திப் செங்காரின் மனைவி சங்கீதா செங்கார், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் , உன்னாவ் பஞ்சாயத்தின் தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்