Aran Sei

‘காந்திக்கு பதிலாக சாவர்க்கரை தேசத்தந்தையாக பாஜக அறிவிக்கும்’ – ராஜ்நாத் சிங் பேச்சிற்கு ஒவைசி கண்டனம்

காந்திக்கு பதிலாக சாவர்க்கரை தேசத் தந்தையாக பாஜக மாற்றிவிடும் என அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கட்சியின் தலைவரும் ஐதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தகம், நேற்று (அக். 13) டெல்லியில் வெளியிடப்பட்டது. இதில் கலந்துக் கொண்டு பேசிய ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சாவர்க்கர் குறித்து பொய்யான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

”சாவர்க்கர் சிறையில் இருந்து விடுதலை அடைய ஆங்கிலேய அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதியது தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. சாவர்க்கரை மன்னிப்பு கடிதம் எழுதும்படி சொன்னது காந்தி தான்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘வாட்சப் குழுவில் இருந்ததற்காக டெல்லி கலவர வழக்கில் குற்றவாளியாக்குகிறது காவல்துறை’ – உமர் காலித் குற்றச்சாட்டு

சாவர்க்கர் ஒரு தேசிய அடையாளம் என தெரிவித்த ராஜ்நாத் சிங், சாவர்க்கர் வலுவான பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர கோட்பாட்டை வழங்கினார் என கூறியுள்ளார்.

”அவர் இந்திய வரலாற்றின் ஒரு அடையாளமாக இருந்தார்; என்றும் இருப்பார். அவரிடம் கருத்து வேறுபாடுகள் கொண்டு இருக்கலாம். ஆனால், அவரைச் சிறுமைப்படுத்துவது முறையானதோ, நியாயமானதோ அல்ல. அவர் சுதந்திர போராளி, தீவர தேசியவாதி. ஆனால், மார்க்சிய மற்றும் லெனிய சித்தாந்தை பின்பற்றுபவர்கள் தான், அவரை பாசிசவாதிகள் என பரப்பப்புகின்றனர்.” என ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

‘இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஒரே மூதாதையர்கள்தான்’ – மோகன் பகவத்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஓவைசி, “சாவர்க்கர் தொடர்பாக பாஜகவினர் தொடர்ந்து திரிக்கப்பட்ட தவறான வரலாற்றை முன்வைக்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால், மகாத்மா காந்தியை நீக்கிவிட்டு சாவர்க்கரை தேசத் தந்தையாக மாற்றிவிடுவார்கள்” என கூறியுள்ளார்.

Source : ANI

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்