Aran Sei

இந்துக் கோவில் இடிக்கப்பட்டு மசூதிக் கட்டப்பட்ட இடங்களில் மீண்டும் கோவில் கட்டப்படும் – உ.பி பாஜக சட்டமன்ற உறுப்பினர்

ங்கெல்லாம் கோவில்கள் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டுள்ளதோ  அங்கெல்லாம்  கோவில்கள் பாஜகாவால் மீள்கட்டுமானம் செய்யப்படும் என்று உத்தரபிரதேச மாநிலத்தைச் சார்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சோம் தெரிவித்துள்ளார்.

மேலும், உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் ‘சுயநல இந்து’  என்றும், பக்தர்கள்மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டவர்கள் தற்போது கோவில் கட்டுவதைக் குறித்து பேசுகின்றனர் என்றும்  கூறியுள்ளார்.

பீமாகோரேகான் வழக்கு – ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நவுலாகா பிணை மனுவை நிராகரித்த நீதிமன்றம்

யோகி ஆதித்யநாத் ஆட்சியின்  சாதனைகள் நடத்தக் கூட்டத்தின்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது, “இந்துஸ்தான் இந்துக்களின் நாடு. இங்குள்ள எல்லோரும் இந்துக்கள். ஏன் இஸ்லாமியர்கள் கூட இந்துக்கள் தான்” என்றும்  சங்கீத் சோம் தெரிவித்துள்ளார்.

Source:THE INDIAN EXPRESS 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்