Aran Sei

ஊடகத்துறையை அச்சுறுத்தும் பாஜக – வேல்முருகன் குற்றச்சாட்டு

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஊடகத்துறையினர் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், உலகம் முழுவதும் 2020-ல் குறைந்தது 50 ஊடகத்துறையினர் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பலர் ஒழுங்கமைந்த குற்றங்கள் , ஊழல் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு குறித்து ஆய்வு செய்யும் போது கொலை செய்யப்பட்டதாக ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் (Reporters Without Borders)  என்ற செய்தி நிறுவனம் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது  என்றும் கூறியுள்ளார்.

2020 – இந்தியா இழந்ததும் தொலைத்ததும்

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்புகளை அம்பலப்படுத்த துணியும் ஊடகவியலாளர்கள் காட்டுமிராண்டித்தனமான கொலைகளின் இலக்குகளாகத் தொடர்கின்றனர் என்று ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் (Reporters Without Borders) அறிக்கை கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

புலனாய்வு ஊடகவியலாளா்கள் கொலை செய்யப்படும் போக்கு அதிகரித்துள்ளது என்று அறிக்கையை மேற்கோள் காட்டிய அவர்,  இந்தியாவில் கொரோனா குறித்து செய்தி வெளியிட்ட குறைந்தது 57 ஊடகத்துறையினர் மீது கைது நடவடிக்கை,  முதல் தகவலறிக்கை, தாக்குதல்கள், வீட்டின் மீது தாக்குதல்கள் நடைபெற்றிருப்பதாக ரைட்ஸ் அண்ட் ரிஸ்க்ஸ் அனாலிசிஸ் குரூப் (RRAG) கூறியிருப்பதை வேல்முருகன்  சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமரை நம்பாத விவசாயிகள் – நரேந்திர மோடியின் வாய்வீச்சு வீரியம் இழக்கிறதா?

”பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஊடகத்துறையினர் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. ( சிறைக்குப் பின்னால் : இந்தியா 2010-2020, ஊடகத்துறையினர் கைது மற்றும் தடுப்புக்காவல்) நேர்மையான ஊடகத்துறையினரை கொலை செய்தோ, சிறைப்படுத்தியோ, தாக்கியோ அச்சுறுத்துவதன் மூலம் உண்மையை மக்களிடமிருந்து தற்காலிகமாக மறைக்கப் பார்க்கிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துரிமையின் குரல்வளையை நெரிக்கும் விதமாக ஒருபுறம் ஊடகவியலாளர்கள் மீது பொய் வழக்குகளைப் புனைவது, இன்னொருபுறம் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தாக்குதல் தொடுப்பது, இவற்றுக்கும் மேலாக கௌரி லங்கேஷ் போன்று நேர்மையான பத்திரிகையாளர்களைப் படுகொலை செய்வது என்ற மும்முனைத் தாக்குதலை பாஜக, ஆர்.எஸ்.எஸ் தொடுப்பத்தாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

விவசாயிகளை பாதிக்கும் பசு வதை தடுப்புச் சட்டம் – அமைதிக்கு காரணம் சாதியப் படிநிலையே

”குணசேகரன், கார்த்திகைச் செல்வன், நெல்சன் சேவியர், தியாகச்செம்மல், கார்த்திகேயன், செந்தில்வேல், ஜீவசகாப்தன், அசீஃப், பீர் முகமது உள்ளிட்ட ஊடக நண்பர்களின் மீதே, பாஜக கும்பல் தனிமனித தாக்குதலை நடத்தியது.  குணசேகரன், செந்தில்வேல், ஜீவசகாப்தன், அசீஃப் ஆகியோர்ரஃ தாங்கள் பணியாற்றிய ஊடங்களை விட்டு வெளியேறும் படி செய்தது பாஜக கும்பல் என்பதை யாராலும் மறுக்க முடியாது”என்றும் அவர் கூறியுள்ளார்.

சங்பரிவாரின் வேலைகள் பெருமைக்காக அல்ல, பிரிவினைக்காக – ராமச்சந்திர குஹா

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இப்படியானவர்களின் நடவடிக்கைகளை அனுமதிப்பது சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மாறக் கூடிய அபாயம் இருக்கிறது  என்றும்  எனவே, ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் (Reporters Without Borders)  என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை கருத்தில் கொண்டு, ஊடகவியலாளர்கள் மீது பாசிச கும்பல் நடத்தி வரும் தாக்குதலை தடுக்க அதிமுக அரசு முன் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக  தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்