Aran Sei

கேரளாவில் இஸ்லாமியர்கள் மீது அவதூறு பரப்பிய பாதிரியார் – பாதிரியருக்கு ஆதரவு திரட்டும் பாஜக

போதை மருந்து ஜிகாத்”  என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாதிரியார் ஜோசப் கல்லரங்கட் பாதுகாக்கும் வகையில் ஒன்றிய அரசு தலையிடவேண்டுமென கேரள பாஜக பொதுச்செயலாளர்  உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இஸ்லாமிய மதத்தைச் சாராத இளைஞர்கள் அடிப்படைவாத ஜிகாதிகளால் போதை பொருட்களுக்குக் குறிவைத்து  உள்ளாக்கப்படுவதாகக் கேரளாவைச் சார்ந்த கத்தோலிக்கப் பாதிரியார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து கேரள பாஜக பொதுச்செயலாளர் ஜார்ஜ் குரியன் அமித்ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஜிகாதி அடிப்படைவாதிகள் சி.பி.ஐ மற்றும் காங்கிரஸ் கட்சியினரின் ஆதரவைப் பெறுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “பல ஜிஹாதிகள் சி.பி.ஐ (எம்) மற்றும் காங்கிரஸின் தீவிரத் தொழிலாளர்கள். இது நிலைமையைக் கொந்தளிப்பாக மாற்றியுள்ளது. இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டுக் கேரளாவில் உள்ள பிஷப் ஜோசப் கல்லரங்கட்  மற்றும் கிறிஸ்தவ சமூகத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோருகிறேன்” என்றும் கூறுகிறேன்.

பிஷப்பின் பேச்சின் காரணமாகக் கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்களிடையே “பாதுகாப்பின்மை” எழுந்துள்ளது என்றும் குரியன் தெரிவித்துள்ளார்.

மேலும், போதைப் பொருளால் ஏற்படும் வன்முறை மற்றும் லவ் ஜிகாத்தைத் தடுக்கும் வகையில் சட்டம் இயற்றவேண்டுமெனவும் கேரள பாஜக பொதுச்செயலாளர்  உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

  ”

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்