Aran Sei

ஜம்மு காஷ்மீரின் பொருளாதாரத்தை பாஜக அழிக்க முயற்சிப்பதை பிரதமர் வேடிக்கை பார்க்கிறார் – மெகபூபா முஃப்தி குற்றச்சாட்டு

Image Credits: DNA India

”ஜம்மு காஷ்மீரின் பொருளாதாரத்தை அழித்து மக்களை ஒடுக்க பாஜக முயற்சித்து வருகிறது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்” என்று மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

குப்வாராவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அரசாங்கம் தெரிவிப்பது போல காஷ்மீரில் அமைதி நிலவினால், பாதுகாப்பு படையினரின் பலம் ஏன் அதிகரிக்கப்பட்டது என்பதை அரசிடம் கேட்க விரும்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.

இந்து ராஷ்ட்ரா – இந்துஃபோபியா; ஒன்றிய அரசின் இரட்டை சவாரிக்கான காரணம் என்ன? – மு.அப்துல்லா

”கடந்த மூன்று ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் பாஜக உருவாக்கி வைத்துள்ள சூழ்நிலை… மக்களை காரணமின்றி கைது செய்வது, தினமும் சோதனை நடத்துவது, அரசு ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவது, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை வெளிமாநிலங்களில் இருந்து அழைத்து வந்து பணியமர்த்துவது போன்றவை தான். ஜம்மு காஷ்மீரின் பொருளாதாரத்தை அழிப்பதே கொள்கையாக தெரிகிறது. நமது அடையாளம் அழிக்கப்பட்டு வருகிறது. நமது பிரதமர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீரில் அமைதி நிலவுவதாக அரசாங்கம் கூறுவது உண்மையானால், அதிகமான பதுங்கு குழிகள் வந்திருக்க கூடாது, எல்லா இடங்களிலும் மக்கள் சோதனை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். நிலைமை அமைதியாக இருந்தால், பாதுகாப்பு படையினர் எண்ணிக்கை குறைக்கப்பட்டு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆயுத படைகள் (சிறப்பு அதிகாரங்கள்)  சட்டம் திரும்பப் பெறப்பட்டிருக்க வேண்டும். கைது நடவடிக்கைகள் குறைந்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அமித் ஷாவுக்கு எதிர்வினை: ‘மொழிப் பேரினவாதமும் மேலாதிக்கமும் ஒரு பூமராங்’ – தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ்

”உண்மையில் அவ்வாறு நடக்கவில்லை. 10 லட்சம் பாதுகாப்பு படையினர் இங்கு உள்ளனர். உலகெங்கிலும் உள்ள காஷ்மீர் மக்களின் எண்ணிக்கைக்கு நிகரான பாதுகாப்புப் படை வீரர்கள் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளனர். பொது பாதுகாப்பு சட்டம் (பிஎஸ்ஏ), சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டம் (யூஏபிஏ) போன்ற கடுமையான சட்டங்கள் பயன்படுத்தப்படுகிறது. தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் பயன்படுத்தபப்டுகிறன” என்று தெரிவித்துள்ளார்.

எந்த ஆதாரமும் இல்லாமல் இளைஞர்கள் கைது செய்யப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள மெகபூபா முஃப்தி, “இளைஞர்களை சில சமயம் போராளிகள் என்றும், சில சமயம் கலப்பினர் போராளிகள் என்றும் சில சமயம் தீவிரவாத ஆதரவாளர்கள் என்றும் முத்திரை குத்துகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீநகர் என்கவுண்டர் நடைபெற்றதாக கேள்விப்படுகிறோம். என்ன நடக்கிறது என்று புரியவில்லை” என்று கூறியுள்ளார்.

காஷ்மீரை ஒரு சிறைச்சாலையாக ஒன்றிய அரசு மாற்றியுள்ளது என்று தெரிவித்துள்ள முஃப்தி ”துப்பாக்கியை கொண்டு மக்களை ஒடுக்க நினைக்கும் அரசின் முயற்சி நீண்ட நாட்களுக்கு நிலைக்காது” என்று தெரிவித்துள்ளார்.

நீங்கள் செய்த அனைத்துக்கும் பெரிய விலை கொடுக்க வேண்டிய நிலை வரும் என்று மெகபூபா கூறியுள்ளார்.

OLA, UBER ஐ புறக்கணித்து புதிய செயலியை உருவாக்கிய தொழிற்சங்கம் – கார்பரேட் நிறுவனங்களுக்கு சவால் விடும் கோயம்புத்தூர் ஆட்டோ ஓட்டுனர்கள்

ஜாமியா பகுதியில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு, கோஷம் எழுப்பியதற்காக, 13 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், மக்களை தான் சிறையில் அடைக்க முடியும், அவர்களின் கருத்துக்களை சித்தாந்தங்களை அல்ல என்று மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

Source: The New Indian Express

நான் வரைந்த ஓவியத்தைத்தான் A.R.Rahman பகிர்ந்தார். ஓவியர் சந்தோஷ் நாராயணின் நேர்காணல்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்