Aran Sei

அசாம் வெள்ளத்தில் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் நிலையில் மகாராஷ்டிரா எம்எல்ஏக்களை ஏலம் எடுத்துக்கொண்டிருக்கிறது பாஜக – திரிணாமுல் குற்றச்சாட்டு

சாம் வெள்ளத்தில் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் நிலையில் மகாராஷ்டிரா  சட்டமன்ற உறுப்பினர்களை ‘ஏலம்’ எடுத்துக் கொண்டிருக்கிறது பாஜக என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட மகாராஷ்டிராவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியுள்ள குவாஹாட்டி ராடிஷன் புளூ தங்கும் விடுதிக்கு  வெளியே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், அசாமைச் சேர்ந்த தொழிலாளர்கள் இணைந்து  போராட்டம் நடத்தியதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அஸ்ஸாம் வெள்ளத்திற்கு நடுவில் சட்டமன்ற உறுப்பினர்களை ஏலம்’ எடுத்துக் கொண்டிருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டது ஏன்? – பாஜக ஆடும் அரசியல் விளையாட்டு

சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர்  அசாமின் குவஹாத்தியில் உள்ள ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இதனால் மகாராஷ்டிரா மாநில அரசாங்கம் அரசியல் நெருக்கடிக்குள் இருக்கிறது.

இந்தப் போராட்டத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ரிபுன் போரா தலைமை தாங்கியுள்ளார். அஸ்ஸாமில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் மக்கள் இறந்து கொண்டிருக்கும்போது, ​​மகாராஷ்டிராவில் இருந்து வந்த அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வசதி செய்து கொடுத்ததற்காக முதல்வர் ஹோமந்தா பிஸ்வா சர்மாவுக்கு ரிபுன் போரா கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு: பணமோசடி வழக்கில் தேடப்பட்டு வருபவருக்கு பாஜகவில் மாநில பொறுப்பு

மகாராஷ்டிராவில் எம்எல்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், 26 சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமறைவானதால் சிவசேனா அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்பட்டது. குவாஹாட்டியில் உள்ள விடுதியில் சுமார் 42 சட்டமன்ற உறுப்பினர்கள் முகாமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உ.பி. அக்னிபத் விவகாரம்: பொது சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடமிருந்து இழபீட்டை வசூலிக்க மாநில அரசு திட்டம்

அரசு இல்லமான வர்ஷாவிலிருந்து குடும்பத்தின் தனிப்பட்ட இல்லமான ‘மாதோஸ்ரீ’க்கு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இடம் பெயர்ந்துள்ளார்.

சுமார் 20 எம்எல்ஏக்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாகக் சிவசேனா கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

Source: indiatoday

Draupadi Murmu | பழங்குடி ஜனாதிபதி | துரோகம் செய்ய ஒரு சாக்கு | Aransei

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்