Aran Sei

2021 – 2022 நிதியாண்டில் ரூ.614 கோடி நன்கொடை பெற்று பாஜக முதலிடம்: ரூ.95.45 கோடி நன்கொடை பெற்று காங்கிரஸ் 2-ம் இடம்

2021 – 2022 நிதியாண்டில் ரூ.614 கோடி நன்கொடை பெற்று பாஜக முதலிடம் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ.95.45 கோடி நன்கொடை பெற்று 2-ம் இடம் பிடித்துள்ளது என்று ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

டெல்லியைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு (ஏடிஆர்) என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு கடந்த 2021-22-ம் நிதியாண்டில் தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை ஆய்வுசெய்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

2020-2021 இல் ரூ.752 கோடி வருமானத்துடன் பாஜக முதலிடம் : ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தகவல்

அதில், “கடந்த 2021-22-ம் நிதியாண்டில் நாடு முழுவதும் தேசிய கட்சிகள் ரூ.20,000-க்கு மேல் பெற்ற நன்கொடை விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டுத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இதன்படி பாஜக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, தேசிய மக்கள் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆகிய தேசிய கட்சிகள் ஒட்டுமொத்தமாக ரூ.780.77 கோடியை நன்கொடையாகப் பெற்றிருக்கின்றன.

இதில் அதிகபட்சமாக பாஜக ரூ.614.62 கோடியை நன்கொடையாகப் பெற்றிருக்கிறது. கடந்த 2020-21-ம் நிதியாண்டில் பா.ஜ.க-வுக்கு ரூ.477.54 கோடி நன்கொடை கிடைத்தது.

தற்போது அந்தக் கட்சிக்கு 28.71 சதவிகிதம் நன்கொடை அதிகரித்திருக்கிறது. கடந்த 2021-22-ம் நிதியாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.95.45 கோடி நன்கொடை கிடைத்திருக்கிறது. அதற்கு முந்தைய நிதியாண்டில் அந்தக் கட்சி ரூ.74.52 கோடி நன்கொடை வசூலித்தது. தற்போது 28.09 சதவிகிதம் அளவுக்கு நன்கொடை அதிகரித்திருக்கிறது.

கார்ப்பரேட்களிடமிருந்து 720 கோடியை நன்கொடையாக பெற்ற பாஜக -ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தகவல்

தேசியவாத காங்கிரஸுக்கு ரூ.57.9 கோடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.10 கோடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.1.94 கோடி, திரிணாமுல் காங்கிரஸுக்கு ரூ.43 லட்சம், தேசிய மக்கள் கட்சிக்கு ரூ.35 லட்சம் நன்கொடைகள் கிடைத்திருக்கின்றன. தேசிய கட்சிகளுக்கு அதிக நிதி வழங்கிய மாநிலங்களில் டெல்லி யூனியன் பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. அங்கிருந்து ரூ.395.84 கோடி நன்கொடை வழங்கப்பட்டிருக்கிறது. இதில் மிக அதிகபட்சமாக பாஜகவுக்கு ரூ.366.57 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. டெல்லியிலிருந்து காங்கிரஸ் ரூ.27.51 கோடியை நன்கொடையாகப் பெற்றிருக்கிறது. டெல்லியை அடுத்து மகாராஷ்டிராவிலிருந்து தேசிய கட்சிகளுக்கு ரூ.105.35 கோடி நன்கொடை வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சார்பில் ரூ.625.88 கோடியும், தனிநபர்கள் சார்பில் ரூ.153.32 கோடியும் தேசிய கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் சார்பில் பாஜகவுக்கு மட்டும் ரூ.548.80 கோடி நன்கொடை வழங்கப்பட்டிருக்கிறது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Source : business today

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்