2019-20 நிதியாண்டில் 4,847.78 கோடி சொத்து மதிப்புடன் பணக்கார கட்சியாக பாஜக முதலிடம் பிடித்துள்ளதாகவும், பகுஜன் சமாஜ் கட்சி 698.33 கோடியாக 2 ஆவது இடத்திலும், காங்கிரஸ் 588.16 கோடியாக 3 ஆவது இடத்தில் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.
2019-20 நிதியாண்டில் இந்தியாவில் உள்ள 7 தேசிய கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு 6,988.57 கோடியாகவும், 44 மாநிலக் கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு 2,129.38 கோடியாக உள்ளது என்று இந்த அறிக்கை கூறியுள்ளது.
2019-20 நிதியாண்டில் இந்தியாவில் உள்ள மாநில கட்சிகளில் சமாஜ்வாதி கட்சி 563.47 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்திலும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி 301.47 கோடி சொத்து மதிப்புடன் 2 ஆவது இடத்திலும், அதிமுக 267.61 கோடி சொத்து மதிப்புடன் 3 ஆவது இடத்திலும் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.
Source : NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.