Aran Sei

சிவசேனாவை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என பாஜக நினைக்கிறது – மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

மகாரஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே credits : the week

பாஜகவின் உத்தரவின் பேரிலேயே ஏக்நாத் ஷிண்டே சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களை அசாமில் தங்க வைத்துள்ளார். இதில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளனர். சிவசேனாவை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என பாஜக நினைக்கிறது என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.

நேற்று நள்ளிரவு உத்தவ் தாக்கரே ஒரு காணொளியை வெளியிட்டார். அதில் அவர், “முதலமைச்சர் பதவியை தக்க வைப்பது குறித்தோ, ஆட்சியை காப்பாற்றுவது குறித்தோ எனக்கு ஒரு துளி கூட கவலை இல்லை; ஆனால் எனது சொந்த கட்சியினரே என் முதுகில் குத்தியது தான் மிகவும் வலிக்கிறது” அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

அசாம் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது –  பிரதமர் ஆட்சிக் கவிழ்ப்பில் பிஸியாக இருக்கிறார் என்று காங்கிரஸ் எம்பி குற்றச்சாட்டு

மகாராஷ்ட்ராவில் ஆளும் சிவசேனாவுக்கு எதிராக அக்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 30-க்கும் மேற்பட்ட அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது அசாம் மாநிலம் குவாஹாட்டியில் முகாமிட்டுள்ளனர். மேலும் 10 சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான ‘மகா விகாஸ் அகாடி’ ஆட்சி கவிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களிடம் சிவசேனா தலைவர்கள் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் இறங்கி வருவதாக தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து, அந்த சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஒன்றிய அரசின் அமைச்சர் சரத் பவாரை மிரட்டுகிறார்: இத்தகைய அச்சுறுத்தல்களை பிரதமர் மோடி ஆதரிக்கிறாரா – சஞ்சய் ராவத்

ஆனால், அவ்வாறு தகுதி நீக்கம் செய்தால் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சிவசேனாவுக்கு பாதிப்பு ஏற்பட்டு, பாஜகவுக்கு சாதகமாக மாறிவிடும் என்பதால் குறிப்பிட்ட சில சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் தகுதி நீக்கம் செய்து மற்ற சட்டமன்ற உறுப்பினர்களை மீண்டும் தங்கள் வசம் இழுக்கும் முயற்சியில் சிவசேனா ஈடுபட்டு வருகிறது.

சிவசேனாவை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என பாஜக நினைக்கிறது. இதற்கான கருவியாக ஏக்நாத் ஷிண்டேவை அக்கட்சி பயன்படுத்துகிறது. ஏக்நாத் ஷிண்டே கூறுவது போல அவர்களிடம் மூன்றில் இரண்டு பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை. எனவே அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்வது எளிதானது தான். முதல்வர் பதவியை தக்க வைப்பது குறித்தோ, ஆட்சியை காப்பாற்றுவது குறித்தோ எனக்கு ஒரு துளி கூட கவலை இல்லை. ஆனால் எனது சொந்த கட்சியினரே என் முதுகில் விட்டார்களே என நினைக்கும் போது வலிக்கிறது” என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

Source : the print

தர்மயுத்தம் OPS Vs ஆளுமை ஐயா EPS | அடிமைகளுக்கிடையே அதிகாரப்போட்டி

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்