Aran Sei

தேர்தல் வெற்றியை மக்களை கொள்ளையடிக்கும் உரிமையாக பாஜக கருதுகிறது – விலைவாசி உயர்வு குறித்து காங்கிரஸ் கண்டனம்

 பாஜக, அதன் தேர்தல் வெற்றிகளை மக்களை கொள்ளையடிக்கும் உரிமையாக கருதுகிறது என காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

எரிபொருள், உரம், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக செய்தியாளர்கள் பேசிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தியதன் மூலம், மக்கள் மீது ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பிலான சுமையை பாஜக அரசு சுமத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“50 கிலோ எடை கொண்ட டிஏபி உரம் மூட்டைக்கு ரூ. 150 உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் விவசாயிகள் ஆண்டுக்கு 1.20 லட்சம் டன் டிஏபி வாங்குகிறார்கள். இதன் மூலம் விவசாயிகளுக்கு 3,600 கோடி ரூபாய் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. அதேபோல், 50 கிலோ எடையுள்ள என்பிகேஎஸ் உர மூட்டையின் விலை ரூ.110 உயர்த்தப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு ரூ 3,740 கோடி கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.” ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பொட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுகுழுவின் தகவலின்படி, 2020-21 நிதியாண்டில் இந்தியாவின் பெட்ரோல் நுகர்வு 27,969 ஆயிரம் மெட்ரிக் டன்களாக இருந்துள்ளது. பெட்ரோலின் விலை லிட்டருக்கு 8 ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம், மக்களுக்கு ஆண்டுக்கு ரூ 20,138 கோடிக்கும் அதிகமான சுமை ஏற்பட்டுள்ளது.” என கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியதன் மூலம் கடந்த எட்டு ஆண்டுகளில் மோடி அரசு ரூ. 26 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ 845 வரை உயர்த்தப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ரு. 250 உயர்த்தப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

ஒரு சிலிண்டரின் விலை ரூ 140.50 வரை உயர்த்தப்பட்டிருப்பதால், மக்களுக்கு ஆண்டுக்கு ரூ. 27,905 கோடி கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. சிஎன்ஜி, குழாய் எரிவாய், தேசிய நெடுஞ்சாலை சுங்க வரி, மருந்துகளுக்கான வரி என அனைத்தின் வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் அனைத்து நிறுவனங்களும் விலை உயர்வை அறிவித்துள்ளதால் கட்டுமான பொருட்கள், கார்கள், மூலதன பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. மக்கள் வாழ்வில் விலை ஏற்றப்படாத பொருட்கள் என்று எதுவும் இருக்காதுஎன காங்கிரஸ் ‌‌‌‌செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

Source: The Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்