Aran Sei

கொல்கத்தா மோடி பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டதாக வெளியான படம் – உண்மை சரிபார்ப்பு

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு  அம்மாநிலத்தின் பாஜகவின் சார்பில் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, கொல்கத்தாவில் இருக்கும் கொல்கத்தா பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டார்.

இந்தப் பேரணியில் திரண்ட மக்கள் கூட்டம் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது. அந்த புகைப்படத்தை தமிழக பாஜக, பஞ்சாப் பாஜக ஆகியவையும் பாஜக உறுப்பினர்கள் திஜிந்தர் பாகா, எஸ்ஜிசூர்யா, பானு ஜாலன், சிஏ ஓபி மிஸ்ரா ஆகியோரும் ட்வீட் செய்திருந்தர்.

Photo Credit : ALTNews

கடந்த வாரம் இதே புகைப்படத்தை காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி (ஐஎஸ்எஃப்) ஆகியவற்றின் கூட்டு பேரணி என காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் பகிர்ந்திருந்தனர்.

உண்மை சரிபார்ப்பு

இது தொடர்பாக ஆல்ட் நியூஸ் இணையதளம் மேற்கொண்ட உண்மை சரிபார்ப்பு முயற்சியில், இந்தப் புகைப்படம் தொடர்பான உண்மை வெளியாகியுள்ளது.

இது, பிப்ரவரி 3, 2019-ம் தேதி பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெற்ற இடது சாரிகள் பேரணியின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சோசியல்நியூஸ்எக்ஸ்ஒய்இசட் இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.

Photo Credit : ALTNews

இதே புகைப்படம் கடந்த ஆண்டு மேற்கு வங்க சிபிஎம் ட்விட்டர் கணக்கில் இருந்தும் பகிரப்பட்டிருந்தது.

புகைப்படத்தில் இருக்கும் கொடிகளின் வண்ணம் சிகப்பா அல்லது காவியா என தெரியாத வண்ணம் எடிட் செய்யப்பட்டிருப்பதாக, ஆல்ட் நியூஸ் தெரிவித்துள்ளது.

புகைப்படம் 2

பாஜக உறுப்பினர் ஒ.பி.மிஸ்ரா புகைப்படம் தொடர்பான உண்மை சரிபார்ப்பையும் ஆல்ட் நியூஸ் செய்துள்ளது.

Photo Credit : ALTNews

இதில் அந்தப் புகைப்படம் 2014-ம் ஆண்டு பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெற்ற இடது சாரிகள் பேரணியின் புகைப்படம் என ஆல்ட் நியூஸ் தெரிவித்துள்ளது.

Photo Credit : ALTNews

தேர்தல்களில் போது இது போன்ற தவறான தகவல்கள் வருவதன் ஒரு பகுதியாகவே மேற்கு வங்கத்திலும் நடைபெற்று இருக்கிறது. எவ்வாறாயினும் மோடி கலந்துகொண்ட பேரணியில்  குறிப்பிடத் தகுந்த அளவிற்கு கூட்டம் திரண்டுள்ளது என ஆல்ட் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்