Aran Sei

கடன் மோசடி வழக்கு – பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் மதுவந்தி வீட்டிற்கு சீல்

னியார் நிதி நிறுவனத்திடம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாததை அடுத்து, பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு இந்துஜா லைலண்ட் என்ற நிதி நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடி ரூபாய் கடனாக பெற்று, சென்னை ஆழ்வார்ப்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள ஆசியானா அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியுள்ளார் மதுவந்தி.

ஸ்க்விட் கேம்: முதலாளித்துவ எதிர்ப்பின் எழுச்சி

கடனை முறையாக திருப்பிச் செலுத்துமாறு நிதி நிறுவனம் பல முறை கூறியும் மதுவந்தி கடனை முறையாக செலுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து கடன் மற்றும் வட்டி சேர்த்து 1,21,30,867 ரூபாயை செலுத்துமாறு நிதி நிறுவனம் மதுவந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நோட்டீஸிற்கு மதுவந்தி முறையாக பதிலளிக்காததை அடுத்து நீதிமன்றத்தில் நீதி நிறுவனம் சார்பில் வழக்கு தொடர்ப்பட்டது.

எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை நீட்டித்த ஒன்றிய அரசு – மாநில உரிமைகளில் தலையிடுவதாக பஞ்சாப், மே.வங்க அரசுகள் குற்றச்சாட்டு

வழக்கை விசாரித்த நீதிமன்றம், மதுவந்தி வீட்டிற்கு சீல் வைத்து வீட்டின் சாவியை இந்துஜா நிதி நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து, ஆணையர் வினோத் குமார் முன்னிலையில், வீட்டிற்கு சீல் வைத்த காவல்துறையினர் வீட்டின் சாவியை இந்துஜா லைலண்ட பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Source : One India Tamil

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்