Aran Sei

பாஜகவை பந்தாடும் திரிணாமுல் – பாஜக அலுவலகத்திற்கு எதிரே மேடை அமைத்து போராட்டம்

டந்த 19-12-20 அன்று. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் திரிணாமூல் காங்கிரசின் அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் மொண்டல், முன்னாள் அமைச்சர் சுவேண்டு அதிகாரி உட்பட பல திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

பாஜகவில் இணைந்த இந்த திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள், ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள பாஜக அலுவலகத்துக்கு வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மேற்கு வங்க பாஜக அலுவலகத்துக்கு அருகில் மேடை அமைத்து திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர்.

விவசாயிகளுடன் பேசிய மம்தா பானர்ஜி – போராட்டத்துக்கு திரிணாமூல் ஆதரவு

இந்நிலையில், பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துக்கொள்ள வந்த சுனில் மொண்டலின் வாகனத்தை சுற்றி வளைத்து திரிணாமூல் காங்கிரசின் தொண்டர்கள் கருப்புக் கொடி ஏந்தியும் கோஷங்கள் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர், சுனில் மொண்டலின் வாகனத்தின் மீதும் ஏறி போராட்டம் நடத்தியுள்ளார் என என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமைத்த மேடைக்கும் பாஜக அலுவலகத்திற்கும் இடையே தடுப்புகள் போடப்பட்டன.

பாஜகவை எதிர்த்து ரத்தம் சிந்தி போராடுவோம் – மம்தா பானர்ஜி

இந்நிலையில், இந்த போராட்டம் தன்னிச்சையாக நடந்திருக்கலாம் என்று திரிணாமூல் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் செளகாதா ராய் தெரிவித்துள்ளார்.

ஏழைகள் வீட்டில் உணவருந்தும் அமித் ஷா – பிரதமரின் பழைய ட்வீட்டை பகிர்ந்து கேளிசெய்யும் திணாமுல்

பாஜகவை அடக்குவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் மேற்கொண்டுள்ள இந்த தந்திரங்கள் தோல்வியடையும் என, பாஜக தலைவர் ஜெய் பிரகாஷ் மஜும்தார்தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்